பல்லாங்குழி

முனைவர் தொ.ப அவர்களின் “பண்பாட்டு அசைவுகள்” நூல் விமர்சனம்

விளையாட்டு என்ற சொல்லை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? இந்த சொல்லில் பொழுதுபோக்கு என்ற பொருள் எங்காவது தொனிக்கிறதா? பொழுதுபோக்கு, பொருளற்றது, ஆழமில்லாதது என்ற பொருளிலேயே அந்த சொல்லை நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். என்ற பளிச் முன்னுரையுடன் தொடங்குகிறார் ஆசிரியர் தொ.ப.

வேட்டை சமூகமாய் வாழ்ந்த மனிதன் மெல்ல முன்னேறி சமூக உயிரினமாக மாறியதற்கு முக்கிய காரணம் விளையாட்டாக கூட இருக்கலாம். விளையாட்டு நம் சமூக விழுமியங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக பணக்கார விளையாட்டு என்று அறியப்படும் கோல்ப் விளையாட்டை எடுத்துக்கொள்வோம் இந்த விளையாட்டை ஒருவர் ஆட மிகப்பெரிய மைதானம் தேவைப்படுகிறது அதனால் தான் அதனை சாமானியர்களால் ஆட முடியவில்லை. ஆனால் நாம் தெருக்களில் விளையாடும் கோலி குண்டிற்கும் இதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை. இரண்டின் நோக்கமும் காய்களை குழிகளில் தள்ளுவதுதான், ஆனால் இந்த சமூகம் என்ன சொல்லி தருகிறது குண்டு விளையாடுவது உதாறித்தனமானது என்று.

இந்த கட்டுரை பல்லாங்குழி விளையாட்டை பற்றி மிக விரிவாக பேசுகிறது. சொல்லப்போனால் இந்த விளையாட்டு சமத்துவம் பேசுகிறது ஆம் அனைவருக்கும் காய்களை சமமாக பிரித்து கொடுத்து விளையாட்டு தொடங்கிகிறது. சூது சில தருணங்களில் நம்மை நிராயுதபாணி ஆக்கும் என்ற உண்மையை பேசுகிறது. தோற்பவன் கையில் ஒன்றுமே இல்லாத போது இந்த விளையாட்டு நிறைவு பெறுகிறது.

ஆரம்பத்தில், விளையாடும் இருவருக்கும் பக்க குழிகள் நீங்கலாக ஆளுக்கு தலா ஏழு குழிகளும், குழிக்கு தலா ஐந்து காய்களும் கொடுக்கப்படும்.

தொடரும்…

ஒரு‌ ‌உண்மை‌ ‌பாகனின்‌ ‌கதை‌ ‌-‌ ‌புத்தக‌ ‌விமர்சனம்‌ ‌

அந்த IFS (Indian Forest Service) அதிகாரிக்கு என்ன பெரிய கொம்பா மோலசுறுக்கு, அர்த ராத்திரி 5 மணிக்கு ஃபோன் பண்ணி கூப்டுறான் அதுவும் இந்த ஊட்டி குளுறுல… என்று புலம்பிக்கொண்டே எழுந்தான் அந்த வன காவலாளி. சில நேரங்களில் மேலதிகாரிகள் மீதுள்ள கோவங்களை நேரடியாக அவர்களிடம் காண்பிக்க இயலாது 🙂 . புலம்பிக்கொண்டு கடைசியாக வனசரக அலுவலகம் வந்தான், அங்கு அந்த காட்டின் வாசனை கூட என்னவென்று தெரியாத மிடுக்கான தேர்வெழுதி மட்டும் வெற்றிபெற்று அதிகாரி ஆன அவரை பார்த்ததும் ஒரு எரிச்சல். என்ன சார் காலைல என்றான்.

இல்ல இங்க ஒரு டாக்டர் இருக்காராம் அவர பாக்கணும், என்ன சார் உடம்பு சரியில்லையா, இல்லபா யானை டாக்டர், ஓ அவரா ஏன் சார் இந்நேரத்தல்… என்று விரியும் இந்த கதை உண்மையில் கதை அல்ல. சோறு சாப்பிடும் போது வாயில் தடைபடும் கல் போல சட்டென்று வேகம் குறைத்து மெல்ல மெல்ல கல்லை எடுக்கும் வித்தை போல மெல்ல மெல்ல படிக்க தூண்டியது.

ஒருமுறை என் மகனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த்க்கொண்டு இருந்தேன், அப்போது விலங்குகளும் அவை உண்ணும் உணவுகளும் என்ற தலைப்பு, வரிசையாக படிக்கும் போது மாடு என்று வந்தது, சட்டென்று என்பையன் பேப்பர் என்றான். அதாவது அவனுக்கு மாடு காகிதம் தான் உண்ணும் என்று தோன்றி இருக்கிறது காரணம் அவன் நாள்தோறும் இந்த நகரத்து வீதிகளில் அதை தான் பார்க்கிறான். நாம் இந்த உயிரினங்களுக்கு எவ்வளவு பெரிய அநீதி இழைக்கிறோம். இந்த புத்தகம் நம் இதை பற்றித்தான் விரிகிறது.

இந்த புத்தகம் யானைகளை பற்றி பேசுகிறது அதிலும் யானைக்கு மருத்துவம் பார்க்கும் ஒரு மாமணிதனை பற்றி பேசுகிறது. “டாக்டர் கே” என்று அனைவராலும் அன்போடு அறியப்பட்ட அவர்தான் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி. இன்றும் மதம் பிடித்த யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தி கட்டுப்படுத்தும் முறையை உலகிற்கும் அறிமுகம் செய்த இந்த மருத்துவரை பற்றி மிக சுருக்கமாக சுவாரசியமாக பேசுகிறது இந்த நூல். எல்லாம் அறிய தகவல், நாம் அறிந்திராத நம் கற்பனைக்கும் எட்டாத யானைகள் பற்றியும், காடுகள் பற்றியுமான தகவல்.

ஒரு யானை ஒருநாளைக்கு 100 முதல் 150 கிலோ உணவு சாப்பிடும், 60 முதல் 80 கிலோமீட்டர் நடக்கும், யானைகள் ஒருநாளும் வலியால் துடித்து பிளிறாது. நீங்கள் பொதுவாக காடுகளுக்கு வார விடுமுறையை களிக்க செல்கிறீர்கள் சும்மாவா செல்கிறீர்கள் போகும்போதே ஒரு கேஸ் பியர், 2 கிலோ கறி கண்டது களியது எடுத்து சென்று காடை நாசம் செய்கிறீர்கள், ஒன்று தெரியுமா நீங்கள் காட்டில் வீசி செல்லும் அந்த ஒற்றை பியர் பாட்டில் யானைகளின் காலில் ஏறினால் என்ன ஆகும் என்று.

60 கிலோமீட்டர் நடக்கும் யானை மெல்ல மெல்ல வேகம் குறைக்கும், 3 டன் எடை கொண்ட யானை காலில் அந்த பியர் பாட்டில் மெல்ல மெல்ல உள்ளே செல்லும், சீழ் பிடிக்கும் வீங்கும், கடைசியாக யானை நடக்க இயலாமல் ஒரு மரத்தின் அடியில் சென்று நின்றுகொள்ளும். தன் கண்முன்னே தான் கால்கள் புழு பிடித்து அழுகுவதை பார்த்து ஒரே ஒருமுறை கண்களை இறுக்கி மூடி மீண்டும் திறக்கும், அது தான் யானைகளின் அதிகபட்ச அழுதல். வினாடிக்கு ஒருமுறை அல்ல அல்ல ஒவ்வொரு முறை சாகும். காடுகளில் இதுபோன்று பல யானைகளின் அழுகிய உடல்களை பார்க்கும் போது மனிதன் எண்ணவகையான மிருகம் என்று யோசிக்க தோன்றும். இவன் காடுகளை ரசிக்க வரவில்லை மாங்காய் துண்டுகளில் மிளகாய் பொடி தடவி குரங்குகளுக்கு கொடுக்கிறான், மலைபாதைகளில் விலங்குகள் குறுக்கே வந்தால் பொறுமை இல்லாமல் அவை எரிச்சல் அடையும் வண்ணம் ஒலி எழுப்புகிறான். ட்ரக்கிங் என்ற பெயரில் துப்பாக்கிகளை, கத்திகளை எடுத்துக்கொண்டு வனவாசம் செல்கிறான். விலங்குகள் இப்படி உன் வாழிடம் வந்தால் விடுவாயா? என்ற ஆழமான அழுத்தமான கேள்விகளை தொடுக்கிறது இந்த புத்தகம்.

விலங்குகள் கம்யூனிஸ்ட்டுகள் அவை தேவைக்கு மீறி உண்பது இல்லை, விலங்குகள் பகுத்தறிவுவாதிகள் அவை மூடநம்பிக்கையில் ஈடுபடுவது இல்லை, விலங்குகள் உலகவாதிகள் தன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் சென்று நியாயம் கேட்பது இல்லை, விலங்குகள் சகிப்புத்தன்மை கொண்டவை அதனால் தான் நம் ஆட்டுவிற்ப்பு எல்லாம் ஆடுகின்றன. ஆனால் அவை ஒருநாளும் மனிதர்களை போன்று அல்ல இருக்கவும் முடியாது ஏனெனில் அவை தன்னுடைய இனத்தையே அழிக்கும் ஆயுதங்களை தயாரிப்பது இல்லை. மனிதநேயத்தை விடவும் உயிர்நேயம் மிகமுக்கியம் – உணவுச்சங்கிலியோடு இதனை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

நமக்கு தான் இந்த யானை டாக்டரை பற்றி தெரியாது, அந்த ஊட்டி டாப் ஸ்லீப் பகுதி விலங்குகளுக்கு நன்றாக தெரியும். உலகில் உள்ள பல விலங்குகள் ஆர்வலர்களுக்கும் நன்றாக தெரியும். காடுகளை பற்றி மட்டும் அல்ல யானைகள் பற்றி மட்டும் அல்ல, அந்த அற்புத மாமனிதனை பற்றி அறிந்துகொள்ள படிக்கவேண்டிய புத்தகம் இது.

ஜெயமோகன் எழுதிய “யானை டாக்டர்” – தன்னறம்  வெளியீடு – விலை ரூபாய் 50

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

முப்பதொன்று

என் மனைவிக்காக..

இதுவரை எந்த பிறந்தநாளும் என்னை இந்தவரை பாதித்தது இல்லை, இந்த வருடமே எனக்கு புதிய வருடம் தான். கண்டிப்பாக.

எனக்கு திருமணம் முடித்து கிட்டத்தட்ட 6 வருடங்கள் ஆனாலும் இந்த வருடத்தை என்னால் மறக்க முடியாது காரணம் என் உயிர் நீ உன்னை முழுமையாய் புரிந்துகொண்டேன், ஆம் உன்னை புரிந்துகொண்டது இந்த வருடத்தில் தான், உணக்குமே சந்தேகம் எலலாம் இப்போது தான் என்னை புரிந்துகொண்டாயா என, ஆம் இப்போது தான்.

எவ்வளவு மாற்றங்கள், நானும் மாறிவிட்டேன், எனக்காக நீயும் மாறிவிட்டாய். இது தான் உண்மையான காதலா என்று யோசிக்க தோன்றுகிறது.

ஒன்று மட்டும் உண்மை, உன்னை உண்மையாக காதலிக்கிறேன், முன்பெல்லாம் சொல்லிய காதல் வார்த்தைகளுக்கும், காதல் கடிதங்களுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் உனக்கு புரியும். எனக்கு கிடைத்த மிகப்பெரும் சொத்து நீ.

உனக்காக தான் வாழ்கிறேன், உனக்காக மட்டும் தான் வாழ்கிறேன்.

மனைவியை காதலியுங்கள் எல்லையின்றி காதலியுங்கள், ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக காதலியுங்கள், உங்கள் உறவினர்கள் முன்பு அவர்களை விடுக்கொடுக்காதீர்கள். அதை தான் உங்கள் அம்மாவும் விரும்புவார்கள் உங்கள் சகோதரிகளும் விரும்புவார்கள் காரணம் அவர்களும் ஒருவருக்கு மனைவியே.

புதிதாய் பிறக்கிறேன், உனக்காக… மறக்கமுடியாத இன்ப அதிர்ச்சிகளை கண்டிப்பாக நான் எதிர்பார்க்கவில்லை.

காதலுடன் என்றும் உனக்காக, உன் நான். ❤️❤️

ulti’matt

This is a promotional video from Wix, a competitor to WordPress the flagship product of the Automattic. In which the ad is made by directly attacking WordPress. But the WordPress CEO criticize this and shared it directly on his blog. After that, the video was viewed more and more. Definitely need guts for this.

This proverb came to mind I saw it “காய்த்த மரமே கல்லடி படும்!”.

I also learned two lessons from these two,

  1. The goal must be large, while our efforts must be prepared for it, if not it doesn’t work.
  2. If there is real trust in your own product, any kind of situation can be overcome.

Let me tell a kutty stories pay attention listen to me

Story 1. Cadbury Dairy Milk vs Children

“Cadbury” is a confectionery company that has expanded its market by publishing a wide variety of advertisements. It also used a variety of phrases. For example “Kiss me and close your eyes”. However, in those ads they will be handling a subtle strategy let’s see what it is.

In the minds of Indians in general, candy is a food item for children, and those who wanted to change it avoided using children in their advertisements, which gave them great success. Yes, we use Dairy Milk candy arbitrarily for everything from starting a promotion to purchasing a new vehicle. Not only this, Help propose your love too.

This is a great business strategy.

Story – 2. Amazon vs COD

We know Amazon is a global eCommerce company. Launched its sales in India in 2012. However, it could not overtake its existing competitor Flipkart. The company made a huge decision about that.

Today we can not even imagine the eCommerce market without this, yes that is the Cash on the Delivery method (COD). It was introduced to India by Amazon. The company, which is number one in eCommerce today, has bravely taken up a huge decision for its growth.

Story 3. Parachute vs Rats

This is an interesting story. before 10 years, We used to buy oil in tin cans, can you believe it was a rat that had the behind to change it and multiply its business?

The Parachute Company was the first to convert its packing method from Tin cans to plastic and then it had a huge problem with the rat infestation. The reason was that the plastic cans were rectangular in shape so the rats could bite them easily.

In contrast, the parachute implemented a fantastic idea. That’s plastic cans without sharp edges. Rats could not bite those shaped cans This design change brought about a major change in the oil trade.

Story 4. Bata vs Price Tags

When I was in school, Bata shoe advertisements would appear on television and they would put a large sum of money on the price tag, strike it up, put half the price on the page and sell it at a discount. Today it has become a strategy. I hope they just came up with the last big digit way to put the price on products at 99, 999…

Reason, normal psychology. Giving a lower price and buying a higher-priced item. Or a look like that. I can say that it worked really well.

Source: https://www.facebook.com/watch/?v=2705323956258589

ஆண் – பெண் – மூன்றாம் பாலினத்தவர்

இந்த வார்த்தைகள் எவ்வளவு வன்மத்தை கக்குகிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது புரியாது. எப்போதும் ஆணுக்கு தான் முன்னுரிமையா? எந்த விண்ணப்பத்திலாவது பெண் / ஆண் என இருப்பதை உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா?

என்னை கேட்டால் விண்ணப்பங்களில் அப்படி தேர்வு செய்யும் முறையை விட்டு எழுத்துமூலமாக எழுதும் முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லது நம் மனக்கிடங்கில் இருக்கும் ஆணாதிக்க மனப்பான்மை நீங்கும் வரையில் பெண் / ஆண் என குறிப்பிடுதல் வேண்டும்.

சரி இப்போது மூன்றாம் பாலினத்தவர், அதாவது ஆணாக பிறந்து தன்னுள் பெண்மையை உணர்ந்து அல்லது புரிந்துகொண்டு பெண்ணாக வாழ்பவர்கள், அதே போன்று பெண்ணாக பிறந்து தனக்குள் இருக்கும் ஆண்மையை புரிந்துகொண்டு ஆண்களாக வாழ்பவர்கள். அவர்களை பொதுவாக நாம் திருநங்கைகள், அல்லது திருநம்பிகள் என்று அழைக்கிறோம். இந்த பெயர்களை கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது அது என்ன மூன்றாம் பாலினம், அப்படி என்றால் நீங்கள் முதல் இரண்டு பாலினம் என்று சொல்ல வருகிறீர்களா? என்னவகையான மனநிலை இது.

திருநங்கைகளோ, திருநம்பிகளோ தங்களை மூன்றாம் பாலினம் என்று சொல்வதையோ விரும்பமாட்டார்கள், அவர்கள் பெண்கள் அல்லது ஆண்கள் என்று ஒரு பாலினத்தில் வகைப்படுத்தல் சமூக நீதி.

இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி பழகுவோம் பெண்ணும் ஆணும் சமம் என்று.

அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ராஜன் விஜயன்,
மனிதநேயவாதி

கற்றதும் பெற்றதும்

அன்று மாலை எப்போதும் போல அலுவலகத்தில் அனைவரும் வேலை பார்த்துக்கொண்டு இருந்தோம், திடீரென ஒரு அறிவிப்பு வந்தது. இன்று முதல் ஒருவாரம் அனைவரும் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்று. ஐயா ஜாலி என்பது போல தான் இருந்தது. அறிவிப்பு வந்தது தான் மிச்சம் உடன் வேலை செய்யும் பல நண்பர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல டிக்கட் போட ஆரம்பித்தார்கள். ஒருவகையில் அன்று என் நிறுவனம் எடுத்தது மிக பெரும் முடிவு.

சரியாக எண்ணி ஒரேவாராம் கழித்து அரசு கொரோனா பொது முடக்கத்தை அறிவித்தது முதலில் 14 நாட்கள், பிறகு 21 நாட்கள், ஒரு மாதம், இரண்டு, மூன்று என உண்மையில் இப்போது எத்தனையாவது மாதம் என்றே குழப்பமாக உள்ளது. அன்று எங்கள் நிறுவனம் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை என்றால் கண்டிப்பாக பலபேர் சென்னையில் மாட்டிக்கொண்டு இருந்திருப்போம் காரணம் என் நிறுவனத்தில் மூன்றில் இரண்டு பங்கு வெளியூர்வாசிகள்.

எத்தனை மாற்றங்கள், திரும்பி பார்த்தால் பெருமூச்சு விட தோன்றுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்து அரக்க பறக்க கிளம்பி சென்னை வாகன நெரிசலில், ரயிலில் பிதுங்கி அலுவலகம் சென்று வீடு திரும்புவது ஸ்ஸப்பா…., இன்று நிலைமை தலைகீழ் காலை எழுந்து குரூப்பில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு தான் பல் விளக்கவே செல்கிறோம். அதே வேலை தான், அதே உழைப்பு தான் ஆனாலும் எவ்வளவு பெரிய மற்றம் எப்படி நாம் இதை தாங்கிக்கொண்டோம்?

ஒரு நாள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமத்திக்க யோசித்த நிறுவனங்கள் பல இன்று நிரந்தரமாகவே தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்கிறார்கள். என்னை பொறுத்தவரை வீட்டில் இருந்து பணி செய்வதால் இதை இழந்தோம் அதை இழந்தோம் என்று சொல்வது பழமை வாதம், உண்மையில் ஜாலியாக தான் உள்ளது. உண்மையாக உங்களின் பணியை மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் செய்தால் வீட்டில் இருந்து பணிபுரியும் முறை சொர்கம் தான்.

கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:

  1. நம்மை கண்காணிக்க யாரும் இல்லை என்ற எண்ணம் எப்போதும் இருக்க கூடாது, உங்களின் பணிகள் அதனை வெளிப்படுத்திவிடும்.
  2. நேரம் மிக முக்கியம், பொது கூட்டங்கள், ஆலோசனை கூட்டங்கள், அமர்வுகள் போன்றவற்றில் சரியான அல்லது சில நிமிடங்களுக்கு முன்பாக சென்று கலந்துகொள்ள வேண்டும். உங்களில் நேரத்தை போல மற்றவர்களில் நேரத்தையும் மதித்து நடந்துகொள்ள வேண்டும்.
  3. செய்யும் வேலையை பதிவுசெய்துகொள்ள அல்லது குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அது மற்றவர்களுக்கு புரியும்படி இருந்தால் சிறப்பு.
  4. அனைத்து வேலைகளுக்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும், அதாவது உங்களுக்கு கொடுக்கப்படும் வேலைக்கு நீங்கள் தான் பொறுப்பு உங்களிடம் உங்கள் நிறுவனம் எதிர்பார்ப்பது நாளில் முடிவில் வந்து சொல்லும் தாமத காரணத்தை அல்ல.
  5. உண்மையாக இருக்க வேண்டும், சிலர் எப்போதும் ஆன்லைன்-இல் இருப்பார்கள் அனால் வேலை மட்டும் நடக்காது. இது எல்லாம் எங்கள் தாத்தா காலத்து டெக்னிக். அது சுத்தமாக வேலைக்கு ஆகாது ஒன்றை மனதில் கொள்ளுங்கள் உங்கள் மீது உங்கள் நிறுவனத்திற்கு நம்பிக்கை போய் விட்டால் அதனை மீண்டும் சம்பாதிப்பது மிகவும் கடினம்.
  6. தொடர்பில் இருக்க வேண்டும், ஒரு நாளைக்கு குறைந்தது ஒருமுறையாவது உங்கள் குழுவினருடனோ அல்லது உங்களோடு பணியாற்றும் நண்பர்களோடு பேசிவிட வேண்டும், நேரில் இருக்கும் போது இது மிக சாதாரணம். இங்கு பலவகையான பிரச்சனைகளுக்கு தொடர்பில்லாமல் இருப்பதே காரணமாகிறது.
  7. உங்கள் விசுவாசத்தை காண்பிக்க வேலை நேரம் இல்லாத நேரங்களில் சக பணியாளர்களை அலுவல் ரீதியாக தொந்தரவு செய்ய கூடாது.
  8. வெளிப்படை தன்மையோடு இருக்க வேண்டும்.

தொடர்ந்து பேசுவோம், இன்னும் எதிர்பார்ப்புகள் வரும் ஆண்டில் வரக்கூடும்.

நான் என்றும் உங்கள் மாணவன் தான்

வேதியியல் ஆய்வு கூடத்திற்கு செல்லும் போது எப்போதும் ஒரு பயம் இருக்கும், ராமானுஜம் சார் என்றாலே ஒரு பீதி இருக்கும் ஆனாலும் அது தேவை தான். அரசுப்பள்ளியில் இவ்வளவு நேர்த்தியான வேதியியல் ஆய்வுக்கூடம் இருக்கும் என்றால் அது உங்களின் ஆய்வுக்கூடம் தான், அது தான் உங்கள் அறை.

நான் பார்க்கும் வேலைக்கும், வேதியியலுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்றாலும் அந்த அறையில் வேதியியலை தாண்டி சுய ஒழுக்கம் என்றால் என்ன என்பதை கற்றுக்கொண்டேன் சார். உங்களின் கண்டிப்பு தான் இன்று என்னை இந்த நிலைக்கு கொண்டுவந்தது.

இன்றும் ஆசிரியர் என்றால் அனிச்சை செயலாய் உங்கள் முகம் தான் வந்து நிற்கிறது. நீங்கள் வேதியியல் மேதை மட்டும் அல்ல எங்களின் வாழ்வியலின் குரு. உங்களிடம் கற்றதும் பெற்றதும் தான் எங்களை திறம்பட இயங்க வைக்கிறது.

இனிய ஆசிரியர் தின வாழ்த்துக்கள் ராமானுஜம் சார், மீண்டும் சொல்கிறேன் நான் என்றும் உங்கள் மாணவன் தான்

ஜூம் பாமிங் – இணைய தாக்குதல்

அந்த சந்திப்பு மிகவும் நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது, அந்த ஒரு நிமிடம் யாரும் எதிர்பார்க்கவே இல்லை. பல முறை கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் அன்று தான் அது எங்களுக்கே நடந்தது. ஜூம் இணையவழி தாக்குதல்.

சென்ற வாரம் வழக்கம் போல சென்னை வேர்ட்பிரஸ் குழுவின் வாராந்திர அமர்வு நடைபெற்றது, எப்போதும் நடைபெறும் அமர்வு போல இல்லாமல் இந்த வாரம் கலந்தாய்வு போல வைத்திருந்தோம். அமர்வு ஆரம்பித்து நன்றாக தான் போய்க்கொண்டு இருந்தது ஏறக்குறைய 25 பேர் இணைப்பில் இருந்தனர்.

திடீர் என்று இரண்டு நபர்கள் அமர்வின் உள்ளே நுழைந்தார்கள், இணையவழி அமர்வு மேலும் இலவச அமர்வு என்பதனால் யார் வேண்டுமானாலும் இதில் பங்கேற்கலாம், மிகவும் மும்முரமாக போய்க்கொண்டு இருந்த அமர்வில் ஒருவன் தனது திரையை முன்னறிவிப்பின்றி பகிர்ந்தான், அதில் மிகவும் கீழ்த்தரமான ஆபாச காணொளி ஓடிக்கொண்டு இருந்தது. அமர்வை ஒருங்கிணைத்துக்கொண்டு இருந்த எங்களுக்கு பேரதிர்ச்சி. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அதுமட்டும் அல்லாமல் அந்த இருவரும் தொடர்ந்து ஆங்கிலத்தில் அல்லது ஏதோ புரியாத மொழியில் எங்களை ஏளனமாக பேசிக்கொண்டே இருந்தனர். கணநேரத்தில் சுதாரித்துக்கொண்டு அவர்களை அமர்வில் இருந்து நீக்கி விட்டோம்.

இருந்தாலும் எங்களால் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர இயலவில்லை. பிறகு எங்களுக்கு நாங்களே சமாதானம் சொல்லிக்கொண்டு விருந்தினர்கள், பார்வையாளர்கள் அனைவரிடமும் மன்னிப்பை கேட்டுவிட்டு தொடர்ந்து அமர்வை நடத்தி முடித்தோம். விருந்தினர்களும் பார்வையாளர்களும் மிகுந்த முதிர்ச்சியோடு இதனை எடுத்துக்கொண்டார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் எங்களை சமாதானம் செய்தார்கள் என்றே சொல்லாம்.

ஒருவேளை அந்த அமர்வு குழந்தைகளுக்கானதாகவோ அல்லது குடும்பத்தினருக்கானதாகவோ இருந்திருந்தால் மிகவும் தர்ம சங்கடமான சூழல் ஏற்பட்டு இருக்கும். சரி போனது போகட்டும் விசயத்திற்கு வருவோம், அவ்வாறு நடந்தால் என்ன செய்யலாம் அல்லது அவ்வாறு நடைபெறாமல் இருக்க என்ன செய்யலாம்.

இணையம் இன்று உலகை கைக்குள் கொண்டுவந்து விட்டது, வினாடி பொழுதில் கலிபோர்னியாவில் உள்ள என் நண்பரிடம் நான் பேசலாம், ஆஸ்திரேலியா நண்பர்களுக்கு நான் பாடம் நடத்தலாம். அனைத்தும் இணையத்தில் சாத்தியம் ஆனாலும் சில பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகள் மிகவும் இன்றியமையாதது.

  1. அமர்வை இணையவெளியில் நடத்த முதலில் என்ன பொறியை பயன்படுத்த போகிறோம் என்றும் அதில் பாதுகாப்பு அம்சங்கள் என்னென்ன உள்ளது என்றும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  2. ஜூம் பொறி மூலம் நடத்தினால் அதில் அனைவரும் திரையை பகிரும் வசதியை கண்டிப்பாக நிறுத்தி வைக்க வேண்டும். யார் பேச்சாளரோ அவர் மட்டும் திரையை பகிருமாறு அமைப்பை உறுதிப்படுத்தி வைக்க வேண்டும்.
  3. கூகிள் மீட் என்றால் கண்டிப்பாக யார் வேண்டுமானாலும் அழைப்பில்லாமல் உள்ளே வருவதை நிறுத்தி வைத்திருக்க வேண்டும்.
  4. தனியாக ஒருவரையோ அல்லது ஒரு குழுவையோ அமைத்து பார்வையாளர்களை கண்காணிக்க வேண்டும். அரட்டை பெட்டியிலும் இதுபோன்ற தேவையில்லாத கருத்துகள் பகிரப்படலாம் ஆகவே அதையும் கவனமாக கண்காணிக்க வேண்டும்
  5. சரி ஒருவேளை நாம் அனைத்தையும் செய்தும் யாரேனும் இப்படி ஆபாச காணொளி அல்லது வேறு ஏதேனும் தேவையில்லாத கருத்தை பகிர்த்தால் முதலில் பதட்டம் அடைய கூடாது. அவர்களின் நோக்கம் பெரும்பாலும் நமக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டும் என்பதே, நாம் பதட்டம் அடைத்தால் அவர்களுக்கு அது சாதகமாக போய் விடும்.
  6. பொறுமையாக அல்லது சிரித்துக்கொண்டே பார்வையாளர்கள் மற்றும் பேச்சாளரிடம் மன்னிப்பை கேட்டு, இது இயல்பு தான் இது போன்று வேலை இல்லாதே நபர்கள் இப்படி தான் செய்வார்கள் என்று கூறிக்கொண்டே அவர்களை பிளாக் செய்ய வேண்டும்.
  7. அவர்கள் மீண்டும் இடையிறு ஏற்படுத்த வேறு பெயரில் வந்து முயலலாம் ஆகவே மிகவும் கவனமாக செயல்பட வேண்டும்.

உலகம் மிகவும் சிறிது தான், இணையம் அதை இன்னும் சிறிதாக்கி விட்டது. அனைத்திற்கும் ஒரு தீர்வு உண்டு. கவனமுடனும் பாதுகாப்போடும் இணையவழி அமர்வுகளை நடத்துவோம், வல்லவனுக்கு வல்லவவன் வரத்தான் செய்வான்

அப்படி என்ன உள்ளது WordPress 5.5 பதிப்பில்?

இன்னும் சிலதினங்களில் (ஆகஸ்ட் 11, 2020) வெளியாகவுள்ள WordPress 5.5 பதிப்பில் அநேகமான புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை என்ன என்று கீழே காண்போம்.

Editor ல் பல புதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஐகான்கள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பழைய பதிப்புகளை விட எளிமையாக்கப்பட்ட எடிட்டராக உள்ளது. அநேகமாக எடிட்டரில் அதிகமான மாற்றங்களை கொண்ட பதிப்பு இதுவாகும். படங்களை எளிமையான முறையில் எடிட் செய்யும் வசதி தரப்பட்டுள்ளது.

Auto Update என்னும் புதிய பயனுள்ள வசதி தரப்பட்டுள்ளது. இதன்முலம் Plugin மற்றும் Theme ஆகியவற்றை தாமாக புதுப்பிக்கும் வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். (ஒருவேளை அவ்வாறு தானியங்கி புதுப்பித்தல் செய்யும் போது வலை தளம் முடங்க வாய்ப்பு உள்ளது)

இனி Plugin மற்றும் Theme ஆகியவற்றில் Updated பாதிப்புகளை zip முறையில் பதிவேற்றம் செய்யலாம் இதுவும் மிக பயனளிக்க கூடிய வசதி ஆகும்.

அனைத்து Image களிலும் லெஸி லோட் செய்யும் அமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது தளத்தில் வேகத்தை அதிகரிக்க உதவும்.

அண்ணாமலை ஜீ

ஐபிஎஸ் படித்துவிட்டு ஆடு மேய்ப்பது ஒன்றும் பெருமைக்குரிய விஷயமோ, பாராட்டப்பட வேண்டிய சம்பவமோ இல்லை, சரியான திட்டமிடல் இல்லை என்பதன் விளைவு.

நீங்கள் ஆடுமெய்க்கும் எண்ணத்தை முன்னமே திட்டமிட்டு செய்து இருந்தால் இந்நேரம் வேறொரு ஐபிஎஸ் அதிகாரி நமக்கு கிடைத்து இருப்பார். காலம், பயிற்சி, இட ஒதுக்கீடு அனைத்தும் வீண்.

மாரிதாஸ் ஆனாலும், மதன் ஆனாலும், சீமான் ஆனாலும் ஏன் கமலகாசன் ஆனாலும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்க முதலில் பெரியாரயே பயன்படுத்துவர். மாரி அண்ணன் மட்டும் விதி விலக்கு என்றாலும் அவரும் ஆரம்ப காலத்தில் கம்யூனிச கொள்கையை வைத்தே கடையை ஆரம்பித்தார்.

“மோடியை ஏன் ஆதரிக்கிறேன்”, “ரஜினியின் முதல்வர் வேட்பாளர்” என்று களத்திற்கு வரும் நீங்கள் ஒரு இரண்டு நாளைக்கு சமூக வலைதள கண்டெண்டாக இருக்க முடியுமேதவிர அப்படி ஒன்றும் பெரிய அதிர்வை ஏற்படுத்தி விட முடியாது.

இங்கு ஏற்கனவே விவசாயி மற்றும் விளக்கை காண்பித்து விபூதி அடி வாங்கிய கூட்டமே அதிகம். உங்களை போன்று ஆயிரம் சங்கிகளை பார்த்த மண் இது, மலர் இங்கு ஒருநாளும் மலராது. வழக்கம் போல் மாறுவேடத்தில் வராமல் நேரடியாக சங்கி என்று வெளியே வரும் உங்கள் நேர்மை கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

வாழ்த்துகள்.

பிரியமுடன் பிரியாணி…

நண்பர்களே ஒன்று தெரியுமா? உலகில் ஈகைக்கு என்றே ஒரு திருநாள் உள்ளது என்றால் அது ரம்ஜான் திருநாள் தான். மதங்களை கடந்து அனைவரும் கொண்டாட வேண்டிய விழா இது.

எத்தனையோ பிரியானிகள் இருந்தாலும் ரம்ஜான் பிரியாணியில் மட்டும் தான் இஞ்சி பூண்டுடன் ஈகையும் சேர்த்து சமைக்கப்படுகிறது.

நான் கருப்புசட்டை, எனக்கு ஏசுவானலும் அல்லாவானலும் தேவையில்லாத ஆணி தான். இருந்தாலும், கிடா வெட்டி தன் மதம், சாதிக்குள்ளே சமைத்து சாப்பிடும் கறிசோறை விட, அனைவருக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும் ரம்ஜான் பிரியானிக்கே சுவை அதிகம்.

அனைத்து இசுலாமிய மற்றும் இசுலாமியர் அல்லாத நண்பர்களுக்கும் ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

அஃறிணை மனிதர்கள்

சங்கி நண்பர் ஒருவர் இந்த படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சுய இன்பம் அடைந்து கொண்டார். இதில் வியப்படைய ஒன்றும் இல்லை, இயல்பாக இருக்கும் சங்கிதணம்.

இந்த படத்தில் “அதுதான் ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது, அதாவது திமுகவினர் தலைவர் ஸ்டாலின் அவர்களை அது என்று அஃறிணையில் அழைப்பதாக அவர் எள்ளலுடன் பதிவிட்டு இருந்தார். ஒரு நிமிடம் அந்த படத்தை பார்த்து அதில் உள்ள வரிகளை முழுமையாக படிக்கவும். முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இதில் அது தான் ஸ்டாலின் என்று கூறுவது அப்படி செய்பவர் தான் ஸ்டாலின் என்று பொருள்படும். தவிர யாரும் தலைவரை தரம் தாழ்த்தும் நோக்கத்தோடு பதிந்திருக்க வாய்ப்பு இல்லை. எப்படியோ திமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்ய வேண்டும், உங்களின் அரசியல் அறிப்பிர்க்கு திமுக தான் தொக்காட்டான் காய்.

மாவட்ட வாரியாக கொரோனா சோதனை செந்தவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிட எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதனை மதிக்காமல், தமிழகம் கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது என்று எடப்பாடி அடிமை அரசு கூற, அதற்கு ஒரு விமர்சனம் வைக்க துப்பு இல்லை, நடந்தே சொந்த ஊர் செல்லும் வடநாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு பதிவு இல்லை, அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு விமர்சனம் இல்லை, எதோ குடும்ப கட்டுப்பாடு செய்த பன்றி போல் அவசர அவசரமாக தைய தக்க என்று குதிக்கு கொண்டு திமுக மீது விமர்சனம்.

அதே சங்கி நண்பர், சென்ற வாரம் அதிமுக அடிமைகளால் ஒரு குழந்தை அநியாயமாக எரித்து கொல்லப்பட்டார், அதற்கு கண்டனம் தெரிவித்து பதிந்த அவர் மறந்தும் அதிமுக பெயரை குறிப்பிடவில்லை. அப்போதே அதை பற்றி பேசி இருந்தால் இதை வைத்தும் அரசியல் செய்வீர்களா என்பார்கள். என்ன தான் உங்கள் நோக்கம்? கேட்டால் நான் சங்கி இல்லை என்பார் பிறகு யார் சார் நீங்க யாருக்கு உங்கள் ஆதரவு என்றால், பல்லை காட்டும் ஸ்மைலி போட்டுவிட்டு ஓடிவிடுவார். தன்னை நடுநிலை நக்கியாகவே முன் நிறுத்திக்கொள்ள நினைப்பர். இது அந்த தனி நபருக்கு மட்டும் அல்ல அவரை போன்ற பல பல எலைட் சங்கிகளுக்கும் பொருந்தும்23

கத்தோலிக்க சங்கிகள்

அங்கு காவி இங்கு வெள்ளை அவ்வளவே வித்தியாசம், இங்கு சாதிகள் ஏராளம். சிலர் கேட்க கூடும் இப்பொழுது எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா அதுவும் கிறிஸ்டியன்ல என்று. கண்டிப்பாக இங்கும் சாதிகள் பார்க்கிறார்கள். சாதி மட்டும் அல்ல நல்ல நேரம், வாஸ்து இன்னும் ஒரு படி மேலே போய் சிலர் ஜாதகம் கூட பார்க்கிறார்கள். ஆனால் சமாதானம் என்கிற வார்த்தையை மட்டும் சொல்லி பூசி மொழுகி விடுகிறார்கள்.

நானும் கலப்பு மனம் தான் செய்தேன் ஆனால் உங்கள் கிறித்தவ மதம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன்? மாற்று மதத்தினரை திருமணம் செய்ய கூடாது என்று உங்கள் புனித நூலில் எழுதி உள்ளதா? மணமகளை மதம் மாற்றினால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று சொல்லுகிறார்களே, உங்கள் மதத்திற்கு இப்படி வம்படியாக மாற்றி என்ன செய்ய போகிறீ்கள். எண்ணிக்கையை கூட்டி காட்டவா? எத்தனையோ பெண்கள் உங்கள் மூடதனத்தால் உங்கள் மத வெறியால் பிறந்த வீட்டில் ஒரு பெயரோடும் புகுந்த வீட்டில் ஒரு பெயரொடும் இருக்கிறார்கள். இன்னமும் பல மேரிகள் மாரி அம்மனை தான் வணங்குகிறார்கள்.

என்னுடைய உறவினர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போனார், அவர் இறந்தது சனி கிழமை, அது போதும் ஒரு கோழியை உயிரோடு பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டார்கள். அட அரைகுறை அறிவுள்ள கத்தோலிக்க சமூகமே உங்கள் பரம பிதா இப்படி தான் புதைக்க உங்களுக்கு கற்றுத்தந்தாரா? அந்த கோழியை கொன்று புதைத்தாலும் ஒரு நிமிட வலியோடு போய் இருக்கும். இரக்கம் கெட்ட இவர்கள் தான் ஆண்டவரே இரக்கமாயிரும் என்கிறார்கள். எப்படி இரக்கம் காட்டுவார் உங்கள் ஆண்டவர்.

நற்கருணை – கடவுளின் உடலும், இரத்தமும். இந்த அற்ப உணவு முரட்டு கிறித்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கபடுமாம். மாற்று மதத்தினர் பெற்றால் அது பாவமாம், இந்த கொடுமையை ஒலி பெருக்கி வாயிலாக வேறு சொல்வார்கள். ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன் எதற்கு உங்கள் கோவிலுக்கு வர போகிறாள், ஒருவேலை வருகிறான் என்றால் நம்பி வருகிறான் என்று தானே பொருள். அப்படி அவர்களை விளக்கி வைப்பதை உங்கள் இயேசுநாதர் சிலுவையில் தொங்கியபடி பார்த்துக்கொண்டு தானே இருப்பார். முதலில் நற்கருணை வாங்கும் நீங்கள் அனைவரும் மனிதர்களா என்று சோதனை செய்யுங்கள் பிறகு கிறிஸ்தவர்களா என்று ஆராய்ச்சி செய்வோம்.

பாவமன்னிப்பு – உலகில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனம் வேறு இல்லை. உறுத்தலாக இல்லை, பண்றது எல்லாம் அயோக்கிய தனம் கடைசியாக போய் ஒரு பாவமன்னிப்பு எல்லாம் சரியா போச்சு. அதும் அதை ஆண்டவரிடம் சொல்ல கூடாதாம் பாதிரியாரிடம் தான் சொல்ல வேண்டுமாம். இது எப்படி மனிதனை திருத்தும், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது தான் பாவம் செய்ய தூண்டும்.

திருப்பலி – இதுதான் ஆண்டவர் கற்பித்த முறையா? இது போன்று திருப்பலி நடந்ததாக பைபிளில் ஏதேனும் குறிப்பு உள்ளதா. அவர் எழுந்ததும் நாமும் எழ வேண்டும், அவர் உட்கார்ததும் நாமும் உக்கார வேண்டும். பிறகு அவர் பாட நாம் பாட… இதெல்லாம் ஒரு நாடகமாக தெரியவில்லையா? இதை எல்லாம் சரியாக செய்தால் தான் உங்கள் கடவுள் வருவார் என்றால் அவர் கடவுள் இல்லை கைக்கூலி. கோவில் வாசலில் இருக்கும் பிச்சை காரர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி கொடுங்கள் திருப்பலி கொடுக்கும் நிம்மதி இதில் அதிகமாய் கிடைக்கும்.

இன்னும் நிறைய மனதினுள் முள்ளாய்,

நல்ல மதம் தானாய் பரவும், நாம் பரப்ப மதம் ஒன்றும் கிருமி அல்ல.

– ஆமென்

திரௌபதி, கர்ணன் மற்றும் ஆண்ட பரம்பரைகள்

முதல் கேள்வி திரௌபதி என்னும் பெண்ணை ஆதரிக்கும் நீங்கள் உங்கள் மனைவியை அல்லது உங்கள் மகளை அந்த இடத்தில் அதாவது ஐந்து ஆண்களுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதிப்பீர்களா?

ஆம் சம்மதிப்போம் என்றால் உங்களுடன் எனக்கு மாற்று கருத்து இல்லை. நீங்கள் ஆண்ட பரம்பரை என்று ஏற்றுக்கொள்கிறேன்.

ஒரு சிறு புராணம்,

திரௌபதி நீண்ட நாட்கள் திருமணமாகாமல் தவமிருக்கிராள். கண்ணன் அதாவது குளிக்கும் பெண்களின் உடைகளை திருடி, பொள்ளாச்சி சம்பவத்திற்கு முன்மாதிரியாக இருந்த கண்ணன் அவள் முன்னே தோன்றி உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்கிறான். அவளோ எனக்கு அன்பு, பாசம், வீரம், கொடை மற்றும் அறிவு அனைத்தும் உள்ளவன் கணவனாக வேண்டும் என்கிறாள்.

கண்ணன், அதற்கு அப்படிப்பட்ட ஆண்மகன் உலகில் ஒருவன் மட்டுமே உள்ளான், அவன் பெயர் கர்ணன் என்கிறான், திரௌபதி கர்ணன் மீது காதல் கொள்கிறாள். இந்த திருமணம் நடக்குமா? ஏனெனில் கர்ணன் சூத்திரன். கொலை வேண்டுமானாலும் செய்வோம் சூத்த்திரணுக்கு பொண்ணை கொடுக்க மாட்டோம் என்னும் சமூகம் இது.

ஆனால் என்ன நடந்தது, கண்ணன் ஒரு மாமா வேலையை செய்தான், ஒவ்வொரு குணநலன் ஒருவரிடயே அமைய பெற்ற ஐந்து ஆண்களை அழைத்து வந்து இவர்களை திருமணம் செய்துகொள் என்கிறான்.

இது எந்த வகையில் இது நியாயம். கொட்சயாக சொல்லவேண்டும் என்றால் இதற்கு பெயர் கூட்டி கொடுப்பது, சரி அது அவர்கள் பாடு.

எனக்கு புரியவில்லை இந்த திரௌபதி உங்கள் வீட்டில் உள்ள பெண். அவளுக்கு அப்படியா நீ ஆண்களை கூட்டி வந்து நிருத்துவாய்?

நாடக காதல் என படம் எடுக்கும் ஆண்ட பரம்பரை ஐந்தறிவு உயிரினங்களே, நீங்கள் ஜாதியை மறுக்க வேண்டும் என்று இப்படி படம் எடுக்குறீர்களா? இல்லை வளர்க்கவா? நீங்கள் சொல்லும் நாடக காதலில் வாழ்க்கையை தொலைத்த பெண்கள் பொள்ளாச்சியில் நிறைய இருக்கிறார்கள். அதனை பற்றி பேசும்போது நவ துவாரத்தயும் மூடிக்கொண்டு விடுகிறீர்கள் என்ன உங்கள் மன நிலை.

எங்களுக்கு எங்களின் ஜாதி மயிறுக்கு சமம். அதுவும் தலை மயிர் அல்ல.

உங்களுக்கு எப்படி?

தற்செயல் நிகழ்வா என தெரியவில்லை, மாரி செல்வராஜ் எடுக்கும் அடுத்த படத்தின் பெயர் கர்ணன். இந்த கர்ணன் உங்கள் திரௌபதியின் கேள்விக்கு பதில் சொல்லுவான்.

குரோம்பேட்டை டூ அண்ணாநகர் அரசியல்.

என்ன இது சென்னை தானா? வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லயே, என்று தேடிக்கொண்டே சென்றால் அதோ அந்த மூளையில் ஒன்றே ஒன்று இருக்கிறது, அதுவும் அருகிலேயே காவல் நிலையமாம், எப்படி சரக்கடித்து முடித்துவிட்டு பிரைடு ரைஸ் கடை காரனிடம் சண்டை இழுப்பது என்று புலம்பிகொண்டே நகர்ந்தார் அந்த தமிழக பொருளாதாரத்தில் மீது அக்கறை கொண்ட குடிமகன்.

ஆம் நான் பேசிக்கொண்டு இருப்பது அண்ணா நகரை பற்றி தான். சரி அப்படியே கொஞ்சம் குரோம்பேட்டை பக்கம் வருவோம்.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவு, 6 டாஸ்மாக் ஒரே ஒரு பொது கழிப்பிடம் அதுவும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்வார்கள். ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒன்றாக அமைய பெற்ற எழை மக்களின் சொர்கம். உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் சேத்துப்பட்டு வரை செல்லலாம், 10 ரூபாய் இருந்தால் செங்கல்பட்டு வரை செல்லலாம். இயற்கையாகவே போக்குவரத்து மிக சிறப்பாக அமைய பெற்ற ஒரு குட்டி சிங்கப்பூர் ( இது எல்லாம் ஓவர் என்பவர்கள் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தைக்கும் சனிக்கிழமை சரவணா ஸ்டோருக்கும் வரவும் ).

சரி அப்போது அண்ணா நகர் குட்டி சிங்கப்பூர் இல்லையா? என்றால் இல்லை, ஒருக்காலும் இல்லை வேண்டும் என்றான் பெரிய மைலாப்பூர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மிக நேர்த்தியான தெருக்கள், குப்பைகள் இல்லா குப்பை தொட்டிகள், தடை இல்லா மின்சாரம், ஆள் நடமாட்டமே இல்லா தெருக்கள், டவுசர் போட்டுக்கொண்டு கீரை வாங்க வரும் அங்கில்கள், சேலை கட்டி ரீபொக் சூ போட்டு வாக்கிங் போகும் ஆண்ட்டி கள்.

சரி இதை வைத்து என்ன அரசியல் பேச போகிறாய் என்று கேட்க போகிறீர்களா?

ஆம் இங்கு அறிய வகை எழைகள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் தெருக்களின் பெயர்களை கேளுங்கள், எண்ணிலும் , எழுத்திலும் இருக்கும், தெருக்களுக்கு பெயர் வைக்க கூட அவர்களிடம் தலைவர்கள் இல்லை, அவர்களில் தலைவர்கள் என்று யாரும் இல்லை ஒரு சிலரை தவிர. மேலும் அவர்களுக்கு திராவிட தலைவர்களின் பெயரை தெருக்களுக்கு வைக்க மனமும் வரவில்லை, வராது. ஆம் உருத்த தானே செய்யும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ராஜாஜி, உவேச, சுப்ரமணியன் (பாரதி).

அப்படியே குரோம்பேட்டை பக்கம் வாருங்கள் இங்கு ராஜாஜி பெயரிலும் தெரு உண்டு, பக்தவச்சலம் பெயரிலும் தெரு உண்டு. சாஸ்திரிக்கும் தெரு உண்டு, காந்திக்கும் தெரு உண்டு, பெரியாருக்கும் ஒரு தெரு, நேருவுக்கும் ஒரு தெரு. 90% தெருக்களின் பெயர் தலைவர்களின் பெயரை தான் தாங்கி நிற்கும். இவ்வாறு தலைவர்களின் பெயரை வைப்பது வெறும் விளம்பரம் அல்ல, அது நன்றி கடன். உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி அல்லவா, உழைக்கும் மக்கள் ஒருநாளும் நன்றி மறக்கமாட்டார்கள்.

அரியவகை ஏழைகள் அதிகம் வசிக்கும் நடுவங்கரை பகுதிக்கு அண்ணாவின் பெயரை வைத்து நொடிக்கு ஒருமுறை நினைவுபடுத்தியது தான் திராவிட கழகங்களின் ஆக சிறந்த சாதனை. பார்ப்போம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த தெருக்கள் எண்ணயும், எழுத்தயும் சுமந்து நிற்கும் என்று.

தெருக்களின் பெயர் வெறும் பெயர் அல்ல, அது ஒரு வரலாறு, ஒரு நன்றிக்கடன்.

கோனைஸ் 20 ரூபாய்…!!

ஆம் உடலுறவு பற்றி, காம அறிவு பற்றி தந்தையோ, தாயோ நேரடியாக பேச முடியாது. அதற்கு தான் அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது அந்த சிற்பங்களை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என நம் முன்னோர்கள் அவ்வாறு அமைத்தனர் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே,

இந்த சிற்பம் என்ன சொல்கிறது, ஆணும் பெண்ணும் களவில் ஈடுபடுகிறார்கள், மற்ற இரண்டு பெண்களுக்கும் அங்கு என்ன வேலை?

தயவு செய்து விளக்குங்கள். ஒருவேளை அது அரசன் அவனுக்கு துணையாக அந்தபுற அழகிகள் இருக்கிறார்கள் என்று உன் பதில் வரும் அப்படி என்றால், உன்னை விட்டுவிடு உன் சகோதரியின் கணவன் அல்லது உன் அப்பா இவ்வாறு செய்தால் நீ பொறுத்து கொள்வாயா?

சரி எதாவது விளக்கம் சொல்லி தப்பிக்க முயற்சி செய்வீர்கள். கர்ப்பணயாக துணை நிற்கும் பெண்கள் ஒருவேளை உன் மனைவியாக இருந்தால், உன் அம்மாவாக, உன் தங்கை அக்காவாக இருந்தால் இவ்வாறு தான் கடந்து செல்வாயா?

90 ml என்று ஒரு படம் வந்தது பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் அது சமூகம் சார்ந்த படம் ஆனால் அதை அவ்வாறு சொன்னால் பார்க்க மாட்டார்கள் விளம்பரம் தேவை, அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது காமம், பெண்கள் கவர்ச்சியாக பேசிக்கொள்ள வேண்டும் அவ்வாறு பேசினால் படத்தில் சிறப்பு காட்சிகள் அதிகம் இருக்கும் என்று அனைவரும்( ஆம் இங்கு அனைவரும் என்பது அனைவரையும் படிக்கும் உங்களையும் ) என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அது அவகளின் நோக்கம் செய்தார்கள். நீங்களும் நாக்கை தொங்க போட்டு கொண்டு தான் பார்த்து இருப்பீர்கள்( நானும் பார்த்தேன்).

ஆனால் பார்ப்பனர்கள் உங்களை திசை திருப்பவே இவ்வாறு செய்தான், நம்ப புடிகிறதா? உங்களால் கருவறைக்குள் செல்ல முடியுமா? நீ என்ன தான் பேண்ட பரம்பரை ஆயினும் நீ அவனுக்கு சூத்திரன். உன்னை கோவிலுக்கு வெளியே சுற்ற வைக்க அவன் செய்த சூழ்ச்சி தான் இந்த வக்கிரமம். இன்று வரை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறாய்.

காம உணர்ச்சி அனைவருக்கும் இயல்பானது, அதனை புனிதம் என்று நீங்கள் சொல்லும் கோவிலில் வைத்து அதற்கு ஒரு வியாகியானம் பேசுவது தான் நகைச்சுவை.

அகற்றி எறியுங்கள் அந்த அக்கிரமங்களை இளைய தலைமுறைக்கு உங்களை விட அனைத்தும் தெரியும். அப்பறம் இதற்கும் தலைபிற்கும் சம்பந்தம் இல்லை.

திருக்குறளும், ஆங்கிலமும் சங்கிகளின் சங்கிஸ்க்கான் யுத்தியும்.

இறுதி சுற்று படத்தில் ஒரு காட்சி வரும், சங்கிஸ்க்கானை பற்றி. அவன் எதிரிகளை விட எதிரிகளின் ஆயுதத்தின் மீதே குறி வைப்பான். ஆயுதங்கள் அனைத்தயும் அழித்தப்பின் எதிரிகளை மிக எளிதாக வென்று விடுவான். இந்த யுத்தியை தான் சங்கிகள் இப்போது கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில நாட்களாக வள்ளுவர் காவி உடையில் ஜொலிக்கிறார். பூனூல் பட்டை நாமம் ருத்ரச்சம் வேறு. இதற்கு அவரை சானியில் அடித்தது பரவாயில்லை போல் தோன்றுகிறது.

சரி ஒருவன் மத சார்பு உடையவனாக ஏன் இருக்க கூடாது அதுவும் திருவள்ளுவர் ஏன் மத சார்பு உடையவராக இருக்க கூடாது? இருக்கலாம் கண்டிப்பாக இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அவரின் மீது நேற்று வந்த ஒரு மதத்தை திணிப்பது முட்டால் தனம்.

இந்து சனாதன கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவன் வள்ளுவன், “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றான், “உழவே தலை” என்றான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற போது “தெய்வத்தால் ஆகாதேனினும்” என்று தெய்வத்தை சோதனை செய்தான். ஆம் வள்ளுவன் தன்னை எங்கும் கடவுள் மறுப்பாளன் என்று காட்டிகொள்ளவே இல்லை அதே போல் கடவுள் பற்றாலன் என்றும் சொல்லவில்லை.

நான் வியந்துபோன குறள்,

கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.

நன்றாக கவனியுங்கள் இங்கு எடுப்பது என்னும் சொல் கொடுக்கும் பொருளில் வருகிறது நேர் எதிரான பொருள் உடைய சொல்லை வள்ளுவர் நேரடி பொருளாக பயன்படுத்தி இருக்கிறார்.

சரி அது என்ன சங்கிஸ்கான் உத்தி. ஆம் இங்கு காவி சாயம் பூச வேண்டும் என்பது அவர்களின் பலநாள் கனவு. அதற்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

புதிய கல்வி கொள்கையை வைத்து சமஸ்கிருத மொழியை திணிக்க அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது நாட்டிற்க்கு ஒரு பொது மொழி என்பது, அதற்காக நாம் கையில் இருக்கும் ஆங்கிலத்தை பறிக்க பார்த்தார்கள், மீண்டும் முயற்சி செய்வார்கள் கண்டிப்பாக. ஆம் ஆங்கிலமும் தான் நம் ஆயுதம் அவர்கள் எதிரிகளை விட அவர்களின் ஆயுதத்தை அழிப்பது தான் முதல் இலக்கு. இப்போது திருக்குறள் மீது அவர்கள் கவனம் சென்றுள்ளது.

வள்ளுவனுக்கு காவி, என்ன சொல்லி புரிய வைப்பது இந்த மர மண்டைகளுக்க்கு, அவர் எதிர்த்ததே உங்கள் வருறாசிரமத்தை தான். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் வள்ளுவன்.

என்னதான் கலர் கலராக வண்ணம் பூசினாலும் இங்கு தாமரை மயிரை தான் மலரும் என்பது எழுதப்படாத விதி.

பொக்கிஷங்கள்

ஒரு நாள் நானும் என் பையனும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்போது அவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வயது. எழுந்து நடக்க முயலும் பருவம். ஆனால் அப்போதும் கொஞ்சம் துரு துரு என்று தான் இருப்பான்.

ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். தவந்து போய் ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்டு அப்பா அப்பா என்றான். நானும் அவனை தேடுவது போல் தம்பி எங்க காணும் என்று தேடினேன். அவன் ஒளிந்துகொண்டு இருந்த அறையின் கதவு தானியங்கி கதவு உள்ளே சென்று பூட்டிக்கொண்டான். அவனுக்கு திறக்க தெரியவில்லை. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர நானும் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன். அங்கு அவன் நின்றுகொண்டு அப்பா அப்பா அன்று அழைத்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் என் மனைவி என்னிடம் வந்து தம்பி உள்ள மாட்டிக்கொண்ட விசயத்தை சொல்ல ஒரு நிமிடம் படபடப்பு தொற்றிக்கொண்டது. கதவை உள்பக்கமாக தான் திறக்க முடியும், அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். சிரித்துகொண்டு இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அழ ஆரம்பித்தான். கதவை தள்ளி உடைத்து திறக்க முடியாது அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். பரபரப்பு பக்கத்து விட்டில் இருந்து கூட வந்து முயற்சி செய்தார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு யோசனை வந்தது. அறையின் பின் புறம் சென்று ஜன்னல் கதவை உடைத்து அவனை என்பக்கமாக அழைத்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். அவனும் அப்பா என்று ஜன்னலின் பக்கம் வந்தான். பிறகு கதவை உடைத்து திறந்தோம். இதனை இங்கு பகிர்வதற்கு காரணம் விளம்பரம் அல்ல. ஒருவேளை அங்கு அந்த அறையில் ஜன்னல் இல்லாமல் இருந்தால்? அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை தொலைபேசியை அனைத்து விட்டு என் பையனுடன் மட்டுமே இருந்தேன். மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது.

ஆனால் இன்று… “தம்பி அம்மா இருக்கேன் பயப்டாத தம்பி” என்று அம்மா அழைக்கிறாள் அவனோ “சரிமா” என்கிறான். அந்த குழந்தை நம்பிக்கொண்டு தானே இருந்து இருக்கும். எந்த பெற்றோரும் பிள்ளைகளை காயப்படுத்த வேண்டும் என நினைப்பதில்லை. சில கவன குறைவு தான். இந்த ஒரு மரணம் நமக்கு ஒரு ஆயிரம் பாடத்தை கற்று தந்துவிட்டது. தம்பி சுர்ஜித் மரணம் கடைசி விபத்தாக இருக்க வேண்டும்.

ஒன்றை மனதில் கொள்வோம். வருமுன் காப்பதே சிறந்தது. உங்கள் குழந்தைகள் மீது சபதம் எடுப்போம்.

1. கண்டிப்பாக உனக்காக நேரம் செலவு செய்வேன்.

2. உனக்கு தொலைபேசியை தர மாட்டேன் அதற்கு பதில் உனக்கு புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள், கிண்டில் போன்ற அறிவு சார்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பேன்.

3. உன் மீதும் உன் சுற்றுப்புறத்தில் நிகழும் மாற்றத்தின் மீதும் எப்போதும் என் கவனம் இருக்கும்.

4. நம் விட்டின் முகவரியையும் என் தொலைபேசி எண்ணயும் உனக்கு மனப்பாடம் செய்ய வைப்பேன்.

5. உன் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பேன்.

6. பருவம், காதல், காமம், இனகவற்சி, மற்றும் உடலின் மாற்ற கூறுகள் தொடர்பாக வெளிப்படையாக பேசுவேன்.

7. உனக்கு என்னிடம் விவாதம் செய்யும் உரிமையை அளிப்பேன்.

8. உன்னை யாரிடமும் ஒப்பிட மாட்டேன்.

9. உன்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.

10. தோல்விகளை தாங்கிக்கொள்ள பயிற்சியும், வெற்றிகளை அடக்கத்தொடு அணுகும் அணுகுமுறையும் உனக்கு கற்றுக் கொடுப்பேன்.

இது உணக்காகவும் உனக்காக வாழும் எனக்காகவும் நான் எடுக்கும் சபதம்.

பிழை இருந்தால் மன்னியுங்கள், இதுதான் இப்போதைய தேவை. குழந்தைகள் பொக்கிஷங்கள். பாதுகாப்போம். பாடம் கற்போம்.