ஆண் – பெண் – மூன்றாம் பாலினத்தவர்

இந்த வார்த்தைகள் எவ்வளவு வன்மத்தை கக்குகிறது என்பது மேலோட்டமாக பார்க்கும் போது புரியாது. எப்போதும் ஆணுக்கு தான் முன்னுரிமையா? எந்த விண்ணப்பத்திலாவது பெண் / ஆண் என இருப்பதை உங்கள் வாழ்நாளில் பார்த்ததுண்டா?

என்னை கேட்டால் விண்ணப்பங்களில் அப்படி தேர்வு செய்யும் முறையை விட்டு எழுத்துமூலமாக எழுதும் முறையை அனைவரும் பின்பற்ற வேண்டும். அல்லது நம் மனக்கிடங்கில் இருக்கும் ஆணாதிக்க மனப்பான்மை நீங்கும் வரையில் பெண் / ஆண் என குறிப்பிடுதல் வேண்டும்.

சரி இப்போது மூன்றாம் பாலினத்தவர், அதாவது ஆணாக பிறந்து தன்னுள் பெண்மையை உணர்ந்து அல்லது புரிந்துகொண்டு பெண்ணாக வாழ்பவர்கள், அதே போன்று பெண்ணாக பிறந்து தனக்குள் இருக்கும் ஆண்மையை புரிந்துகொண்டு ஆண்களாக வாழ்பவர்கள். அவர்களை பொதுவாக நாம் திருநங்கைகள், அல்லது திருநம்பிகள் என்று அழைக்கிறோம். இந்த பெயர்களை கூட பொறுத்துக்கொள்ள முடிகிறது அது என்ன மூன்றாம் பாலினம், அப்படி என்றால் நீங்கள் முதல் இரண்டு பாலினம் என்று சொல்ல வருகிறீர்களா? என்னவகையான மனநிலை இது.

திருநங்கைகளோ, திருநம்பிகளோ தங்களை மூன்றாம் பாலினம் என்று சொல்வதையோ விரும்பமாட்டார்கள், அவர்கள் பெண்கள் அல்லது ஆண்கள் என்று ஒரு பாலினத்தில் வகைப்படுத்தல் சமூக நீதி.

இனிமேலாவது கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லி பழகுவோம் பெண்ணும் ஆணும் சமம் என்று.

அனைவருக்கும் இனிய உலக மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

ராஜன் விஜயன்,
மனிதநேயவாதி