குரோம்பேட்டை டூ அண்ணாநகர் அரசியல்.

என்ன இது சென்னை தானா? வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லயே, என்று தேடிக்கொண்டே சென்றால் அதோ அந்த மூளையில் ஒன்றே ஒன்று இருக்கிறது, அதுவும் அருகிலேயே காவல் நிலையமாம், எப்படி சரக்கடித்து முடித்துவிட்டு பிரைடு ரைஸ் கடை காரனிடம் சண்டை இழுப்பது என்று புலம்பிகொண்டே நகர்ந்தார் அந்த தமிழக பொருளாதாரத்தில் மீது அக்கறை கொண்ட குடிமகன்.

ஆம் நான் பேசிக்கொண்டு இருப்பது அண்ணா நகரை பற்றி தான். சரி அப்படியே கொஞ்சம் குரோம்பேட்டை பக்கம் வருவோம்.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவு, 6 டாஸ்மாக் ஒரே ஒரு பொது கழிப்பிடம் அதுவும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்வார்கள். ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒன்றாக அமைய பெற்ற எழை மக்களின் சொர்கம். உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் சேத்துப்பட்டு வரை செல்லலாம், 10 ரூபாய் இருந்தால் செங்கல்பட்டு வரை செல்லலாம். இயற்கையாகவே போக்குவரத்து மிக சிறப்பாக அமைய பெற்ற ஒரு குட்டி சிங்கப்பூர் ( இது எல்லாம் ஓவர் என்பவர்கள் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தைக்கும் சனிக்கிழமை சரவணா ஸ்டோருக்கும் வரவும் ).

சரி அப்போது அண்ணா நகர் குட்டி சிங்கப்பூர் இல்லையா? என்றால் இல்லை, ஒருக்காலும் இல்லை வேண்டும் என்றான் பெரிய மைலாப்பூர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மிக நேர்த்தியான தெருக்கள், குப்பைகள் இல்லா குப்பை தொட்டிகள், தடை இல்லா மின்சாரம், ஆள் நடமாட்டமே இல்லா தெருக்கள், டவுசர் போட்டுக்கொண்டு கீரை வாங்க வரும் அங்கில்கள், சேலை கட்டி ரீபொக் சூ போட்டு வாக்கிங் போகும் ஆண்ட்டி கள்.

சரி இதை வைத்து என்ன அரசியல் பேச போகிறாய் என்று கேட்க போகிறீர்களா?

ஆம் இங்கு அறிய வகை எழைகள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் தெருக்களின் பெயர்களை கேளுங்கள், எண்ணிலும் , எழுத்திலும் இருக்கும், தெருக்களுக்கு பெயர் வைக்க கூட அவர்களிடம் தலைவர்கள் இல்லை, அவர்களில் தலைவர்கள் என்று யாரும் இல்லை ஒரு சிலரை தவிர. மேலும் அவர்களுக்கு திராவிட தலைவர்களின் பெயரை தெருக்களுக்கு வைக்க மனமும் வரவில்லை, வராது. ஆம் உருத்த தானே செய்யும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ராஜாஜி, உவேச, சுப்ரமணியன் (பாரதி).

அப்படியே குரோம்பேட்டை பக்கம் வாருங்கள் இங்கு ராஜாஜி பெயரிலும் தெரு உண்டு, பக்தவச்சலம் பெயரிலும் தெரு உண்டு. சாஸ்திரிக்கும் தெரு உண்டு, காந்திக்கும் தெரு உண்டு, பெரியாருக்கும் ஒரு தெரு, நேருவுக்கும் ஒரு தெரு. 90% தெருக்களின் பெயர் தலைவர்களின் பெயரை தான் தாங்கி நிற்கும். இவ்வாறு தலைவர்களின் பெயரை வைப்பது வெறும் விளம்பரம் அல்ல, அது நன்றி கடன். உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி அல்லவா, உழைக்கும் மக்கள் ஒருநாளும் நன்றி மறக்கமாட்டார்கள்.

அரியவகை ஏழைகள் அதிகம் வசிக்கும் நடுவங்கரை பகுதிக்கு அண்ணாவின் பெயரை வைத்து நொடிக்கு ஒருமுறை நினைவுபடுத்தியது தான் திராவிட கழகங்களின் ஆக சிறந்த சாதனை. பார்ப்போம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த தெருக்கள் எண்ணயும், எழுத்தயும் சுமந்து நிற்கும் என்று.

தெருக்களின் பெயர் வெறும் பெயர் அல்ல, அது ஒரு வரலாறு, ஒரு நன்றிக்கடன்.

Leave a Reply