கத்தோலிக்க சங்கிகள்

அங்கு காவி இங்கு வெள்ளை அவ்வளவே வித்தியாசம், இங்கு சாதிகள் ஏராளம். சிலர் கேட்க கூடும் இப்பொழுது எல்லாம் யாரு சார் ஜாதி பாக்குறா அதுவும் கிறிஸ்டியன்ல என்று. கண்டிப்பாக இங்கும் சாதிகள் பார்க்கிறார்கள். சாதி மட்டும் அல்ல நல்ல நேரம், வாஸ்து இன்னும் ஒரு படி மேலே போய் சிலர் ஜாதகம் கூட பார்க்கிறார்கள். ஆனால் சமாதானம் என்கிற வார்த்தையை மட்டும் சொல்லி பூசி மொழுகி விடுகிறார்கள்.

நானும் கலப்பு மனம் தான் செய்தேன் ஆனால் உங்கள் கிறித்தவ மதம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை, ஏன்? மாற்று மதத்தினரை திருமணம் செய்ய கூடாது என்று உங்கள் புனித நூலில் எழுதி உள்ளதா? மணமகளை மதம் மாற்றினால் தான் திருமணம் செய்து வைப்போம் என்று சொல்லுகிறார்களே, உங்கள் மதத்திற்கு இப்படி வம்படியாக மாற்றி என்ன செய்ய போகிறீ்கள். எண்ணிக்கையை கூட்டி காட்டவா? எத்தனையோ பெண்கள் உங்கள் மூடதனத்தால் உங்கள் மத வெறியால் பிறந்த வீட்டில் ஒரு பெயரோடும் புகுந்த வீட்டில் ஒரு பெயரொடும் இருக்கிறார்கள். இன்னமும் பல மேரிகள் மாரி அம்மனை தான் வணங்குகிறார்கள்.

என்னுடைய உறவினர் சில மாதங்களுக்கு முன்னர் இறந்து போனார், அவர் இறந்தது சனி கிழமை, அது போதும் ஒரு கோழியை உயிரோடு பெட்டிக்குள் வைத்து புதைத்து விட்டார்கள். அட அரைகுறை அறிவுள்ள கத்தோலிக்க சமூகமே உங்கள் பரம பிதா இப்படி தான் புதைக்க உங்களுக்கு கற்றுத்தந்தாரா? அந்த கோழியை கொன்று புதைத்தாலும் ஒரு நிமிட வலியோடு போய் இருக்கும். இரக்கம் கெட்ட இவர்கள் தான் ஆண்டவரே இரக்கமாயிரும் என்கிறார்கள். எப்படி இரக்கம் காட்டுவார் உங்கள் ஆண்டவர்.

நற்கருணை – கடவுளின் உடலும், இரத்தமும். இந்த அற்ப உணவு முரட்டு கிறித்தவர்களுக்கு மட்டுமே கொடுக்கபடுமாம். மாற்று மதத்தினர் பெற்றால் அது பாவமாம், இந்த கொடுமையை ஒலி பெருக்கி வாயிலாக வேறு சொல்வார்கள். ஒரு மாற்று மதத்தை சேர்ந்தவன் எதற்கு உங்கள் கோவிலுக்கு வர போகிறாள், ஒருவேலை வருகிறான் என்றால் நம்பி வருகிறான் என்று தானே பொருள். அப்படி அவர்களை விளக்கி வைப்பதை உங்கள் இயேசுநாதர் சிலுவையில் தொங்கியபடி பார்த்துக்கொண்டு தானே இருப்பார். முதலில் நற்கருணை வாங்கும் நீங்கள் அனைவரும் மனிதர்களா என்று சோதனை செய்யுங்கள் பிறகு கிறிஸ்தவர்களா என்று ஆராய்ச்சி செய்வோம்.

பாவமன்னிப்பு – உலகில் இது போன்ற ஒரு அயோக்கியத்தனம் வேறு இல்லை. உறுத்தலாக இல்லை, பண்றது எல்லாம் அயோக்கிய தனம் கடைசியாக போய் ஒரு பாவமன்னிப்பு எல்லாம் சரியா போச்சு. அதும் அதை ஆண்டவரிடம் சொல்ல கூடாதாம் பாதிரியாரிடம் தான் சொல்ல வேண்டுமாம். இது எப்படி மனிதனை திருத்தும், உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது தான் பாவம் செய்ய தூண்டும்.

திருப்பலி – இதுதான் ஆண்டவர் கற்பித்த முறையா? இது போன்று திருப்பலி நடந்ததாக பைபிளில் ஏதேனும் குறிப்பு உள்ளதா. அவர் எழுந்ததும் நாமும் எழ வேண்டும், அவர் உட்கார்ததும் நாமும் உக்கார வேண்டும். பிறகு அவர் பாட நாம் பாட… இதெல்லாம் ஒரு நாடகமாக தெரியவில்லையா? இதை எல்லாம் சரியாக செய்தால் தான் உங்கள் கடவுள் வருவார் என்றால் அவர் கடவுள் இல்லை கைக்கூலி. கோவில் வாசலில் இருக்கும் பிச்சை காரர்களுக்கு ஒருவேளை உணவு வாங்கி கொடுங்கள் திருப்பலி கொடுக்கும் நிம்மதி இதில் அதிகமாய் கிடைக்கும்.

இன்னும் நிறைய மனதினுள் முள்ளாய்,

நல்ல மதம் தானாய் பரவும், நாம் பரப்ப மதம் ஒன்றும் கிருமி அல்ல.

– ஆமென்

Leave a Reply