இது திராவிட மாடல் ஆட்சி

இதுவரை மறைமுகமாக அரசியல் பேசிக்கொண்டு இருந்த தாங்கள் நேரடியாக அரசியல் பேச வந்தமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.

நீங்கள் எழுதிய ஞாயிறு கடிதம் சமூகவலைத்தளங்கள் மூலமாக கிடைக்கபெற்றதது. 15/10/2023 அன்று தங்கள் எழுதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கைகள் தொடர்பான கடிதத்தில் எனக்கு சில மாற்றுக்கருத்துக்கள் உள்ளது, அதனை மிக்க பணிவுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் கட்சி வாரியாக உறுப்பினர்கள் அமர வைக்கப்படுகின்றனர். அதுதான் மரபு அனைவரையும் கலந்து அமர சொல்கிறீர்களா? என்பது எனக்கு தெரியவில்லை. பொதுவாக இடதுசாரிகள், வலதுசாரிகள் என்ற சொற்கள் பேச்சுவழக்கில் உள்ளது, அந்த சொற்களுக்கான காரணமே மக்கள் பிரதிநிதிகளை அவ்வாறு அமர வைப்பதில் இருந்துதான் வந்தது என்று ஒரு புத்தகத்தில் படித்த நியாபகம்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறித்து பேசுகிறீர்கள், ஒன்றை தெரிந்துகொள்ளுங்கள் நம் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி, எதிர்க்கட்சி கொறடா போன்ற பதவிகள் உள்ளனவே தவிர எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி அங்கீகரிக்கப்பட்ட பதவி அல்ல. அது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் சட்ட மன்றத்திக்கும் அதன் சபாநாயகருக்குமே உள்ளது. நாளை இணை தலைவர், துணை தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று அனைத்து பதவிகளுக்கும் இருக்கை கேட்டால் என்ன செய்வது?

துணைத்தலைவர் இருக்கை விவகாரம் சிக்கல் உள்ளதாய் இருக்கிறது என்கிறீர்கள், அது குறித்து விவாதிப்பதனால் நேரவிரயம் ஆகிறது என்கிறீர்கள். யார் இந்த விவகாரத்தை கிளப்பியது. சட்டமன்றமே இது குறித்து தான் பேசிக்கொண்டு இருப்பது போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறீர்கள். சென்ற வாரம் இது குறித்து கூட்ட தொடரின் மூன்றாவது நாளில், மாண்புமிகு சட்டமன்ற எதிர்காட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். அதில் அவர் கூற வருவது எதிர்க்கட்சி தலைவருக்கான இருக்கை என்பதை தாண்டி அவரின் அருகில் அமர்ந்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஓ.பன்னேர்செல்வம் இடமாற்றம் குறித்ததே. அடிப்படை அரசியல் தெரிந்த அனைவரும் இதற்கான காரணத்தை அறிவர். எதிர்க்கட்சி என்பதை ஆளும்கட்சியை வழிநடத்தும் அட்சாணியாக இருக்க வேண்டும் ஆனால் அவர்களின் உட்கட்சி பிரச்சனையை சட்ட மன்றத்தில் தீர்த்துக்கொள்ள நினைப்பது, அது குறித்து வீண் விவாதம் செய்து மன்றத்தின் மாண்பை குலைக்க முயற்சிப்பது முட்டாள்தனம்.

சரி, அது போகட்டும் பள்ளி மாணவர்கள் இருகைகளையும், சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கையையும் ஒப்பிடுகிறீர்கள் இது எப்படி சரி ஆகும். பள்ளி வகுப்பில் அமர்ந்து இருக்கும் மாணவர்கள் பல அணிகளாக இருக்க முடியுமா? அது என்ன விவாத கூடமா? அங்கு மாணவர்கள் கலந்து அமர்வது தான் இயற்க்கை அறம். ஆனால் சட்ட மன்றமோ, நாடாளுமன்றமோ அப்படியா? அங்கே தான் சட்டம் இயற்றப்படும், விவாதங்கள் நடைபெறும் அப்படி இருக்க இருக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உங்களுக்கு தெரியவில்லையா?

மன்றத்தில் உறுப்பினர்கள் பழகுவது குறித்து பேசுகிறீர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் சிரித்து பேசிய காரணத்திற்க்காக பதவியை பறித்த இரும்பு பெண்மணிகளை பெற்றுருந்த மன்றம் இது. இந்த ஆட்சியில் தான் எதிர்க்கட்சிகளின் குரல் வெளியே கேட்கிறது அதற்கு காரணம் அண்ணா, கலைஞர் வழிவந்த திராவிட மாடல் ஆட்சி. சட்டமன்றம் உறுப்பினர்கள் பழகுவதற்கான இடம் அல்ல, விவாதிக்கும் இடம், நாட்டில் பழக ஆயிரம் இடங்கள் உள்ளன.

எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவை அமைக்க சில கூட்டம் துடித்துக்கொண்டு இருக்கையில், எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து அமர சொல்கிறீர்கள். நீங்கள் திமுக மற்றும் அதிமுகவை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்று குறிப்பிட்டு இவ்வாறு சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அவர்களுக்கான இடத்தில் அமரவே இப்படி பஞ்சாயத்தை கூட்டுகிறார்கள் அவர்களா ஆளும்கட்சியுடன் அமரபோகிறார்கள்.

மேலும் உங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆளும்கட்சி எதிர்க்கட்சி அமைப்பு தெரியவில்லை என்று நினைக்கிறேன், காரணம் நம் சட்ட மன்றத்தில் திமுக மட்டுமே ஆளும்கட்சி, மற்ற அனைத்து கட்சிகளும் அதாவது அதிமுக உட்பட காங்கிரஸ், விசிக, பாஜக, முஸ்லீம் லீக், கம்னியூஸ்ட்டுகள் என அனைத்து கட்சிகளும் எதிர்க்கட்சிகள் தான் அவர்கள் இப்போதும் கலந்து தான் அமர்கிறார்கள்.

மணிப்பூர் விவகாரம், சிஏஜி ஊழல், ஓபிசி இட ஒதுக்கீடு பிரச்சனை, பெண்களுக்கான போலி இடஒதுக்கீடு நாடகம், கொடநாடு விவகாரம் போன்ற ஆயிரம் விஷயங்கள் நாட்டில் உள்ளன, அவற்றை பற்றி பேசாமல் ஒன்றிற்கும் உதவாத இது போன்ற விவகாரம் குறித்து கடிதங்கள் எழுதி நேரத்தை வீணாக்காமல் ஆக்கப்பூர்வமாக எழுதுங்கள்.

இப்போது மட்டும் அல்ல அண்ணா என்ற ஒரு மாபெரும் அறிஞன் எப்போது எங்கள் மண்ணில் உதித்தானோ அப்போதே மாறிவிட்டது இந்த உலகிற்க்கே முன்மாதிரி சட்டமன்றமாய்.

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார்.

இது தமிழ்நாடு அரசுப் பள்ளிகள் வீழ்ச்சியா?

நண்பர் ஒருவர் தனது சமூக வலைதள பக்கத்தில் சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளியை வெளியிட்டு இருந்தார். அதனை பார்த்த பிறகு மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். யார் ஒருவரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது என்னுடைய நோக்கம் அல்ல, ஆனால் ஒரு பெரிய பொறுப்பில் உள்ள நபர்கள் போதிய தரவுகளோ, ஆய்வுகளோ இன்றி இவ்வாறு பதிவிடும்போது அதனை சுட்டிக்காண்பித்து அதனை மாற்ற முயற்சிப்பதும், மக்களுக்கு தவறான கருத்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் கருத்துக்களை தகுந்த ஆதாரம் கொண்டு தகர்த்து எறிவது எனது பெரும் பொறுப்பாக உணர்கிறேன்.

கொஞ்சம் வரலாற்றை பேசிவிட்டு நண்பரின் காணொளிக்கு செல்வோம். இந்தியாவிலேயே முதல்முறையாக பாடநூல் கழகம் தமிழக அரசால் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் 1970 ஆண்டு உருவாக்கப்பட்டது. நீதிக்கட்சி காலத்தில் சென்னை மாகாணத்தில் கொண்டுவரப்பட்ட மதிய உணவுத்திட்டம், பின்பு முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களால் தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்தப்பட்டு பின்னர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டு இன்றளவும் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் இலவச பேருந்து, இலவச காலணிகள், இலவச நோட்டுப்புத்தகம், இலவச புத்தக பைகள், இலவச பஸ் பாஸ், இலவச சைக்கிள், இலவச மடிக்கணினி மற்றும் தற்போது முதலமைச்சர் காலை உணவுத்திட்டம் என்று பல சிறப்பான திட்டங்களால் தமிழகம் இன்று கல்வியில் சிறந்து விளங்குகிறது.

ஒரு அரசு ஏன் இவ்வளவு இலவசங்களை கொடுத்து குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும்? இதற்க்கு விடை தெரிய ஒரு நூற்றாண்டு பின்னோக்கி செல்லவேண்டும். காலகாலமாக கல்வி மறுக்கப்பட்ட சமூகம் தான் இது, நாம் இன்று பெரு நகரங்களில் அமர்ந்து கொண்டு யாரு சார் சாதி பாக்குறா என்று நாம் பினாத்திக்கொண்டு இருக்கும் அதே வேலையில் தான் தென்கோடியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண் சமைத்த உணவை இடைநிலை சாதியை பெற்றோர்கள் தங்களில் குழந்தைகளுக்கு கொடுக்க கூடாது என்று போராட்டம் நடத்துகிறார்கள். அந்த பெற்றோர்களை குறை சொல்லி ஒன்றும் இல்லை, காலகாலமாக அவர்களின் மண்டையில் புறையோடிப்போன சாதிய வன்மம் அவ்வாறு அவர்களை செய்யத்தூண்டுகிறது. ஒருவேளை இப்போது உள்ளது போல கல்வி வாய்ப்புகள் அந்த பெற்றோர்களுக்கும் கிடைத்திருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்திருக்காது.

ஒரு சமூகம் மட்டுமே பெற்றுவந்த குலக்கல்வியை கிறித்தவ மிஷினெரிக்கள் அனைவருக்குமான பொது கல்வியாக மாற்றின, இந்தியா என்ற கட்டமைப்பு உருவான பின்னர், அடுத்து வந்த அரசுகள் பள்ளிகளை அரசுடைமை ஆக்கின. அப்போதும் பொருளாதாத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களுக்கு கல்வி ஒரு எட்டாத கனியாகவே இருந்தது. பின்னர் இலவசக்கல்வி, அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்கல்வி என பல்வேறு தொலைநோக்கு திட்டங்களினால் தமிழகம் இன்று கல்வியில் தலை நிமிர்ந்து முன்னணி மாநிலமாக நிற்கிறது. இதற்க்கு பெரும் காரணம் தமிழ்நாட்டு அரசுப்பள்ளிகள் தான் என்பதை மறுக்க இயலாது.

இரண்டு கேள்விகளை மட்டும் கேட்டுவிட்டு, உங்கள் காணொளிக்கு வருகிறேன். நீங்கள் உங்கள் சுற்றத்தில் உள்ளதை மட்டுமே பார்த்து இந்த பதிவை இட்டதாக தெரிகிறது. உயர்கல்வி வாசனை கூட தெரியாத பல கிராமங்கள் இன்றும் தமிழகத்தில் இருக்கின்றன, அந்த பள்ளிகளுக்கு சென்று அங்கு படிக்கும் பிள்ளைகளின் முகங்களை பார்த்தால் இப்படி அரசுப்பள்ளிகளை விமர்சிக்கும் எண்ணம் உங்களுக்கு வந்திருக்காது. ஓராசிரியர் பள்ளி, ஒற்றை இலக்க மாறவர்களை கொண்ட பள்ளி என்கிறீர்கள், என்ன செய்யலாம் அந்த பள்ளிகளை முடிவிடலாமா? ஒற்றை இலக்க மாணவர்களுக்காக அவர்களின் கல்விக்காக முனைப்புடன் அவர்களின் எதிர்காலத்திற்காக செயல்படும் அந்த பள்ளிகளை பாராட்டாவிட்டாலும் விமர்சிக்காமல் இருப்பதே அறம்.

உங்கள் காணொளியில் CBSE பள்ளிகளில் தான் அரசு அதிகாரிகளும், என்னை போன்ற நகரவாசிகளும் தங்களின் பிள்ளைகளை சேர்க்கிறார்கள் என்கிறீர்கள், ஏன் கூடாது? சென்னை வந்த புதிதில் நான் பொது பேருந்தில் தான் அலுவலகம் செல்வேன், பின்பு இருசக்கர வாகனம், இப்போது கார். தேவைக்கும் சொகுசிற்கும் வித்யாசம் உள்ளதல்லவா. நான் அரசுப்பள்ளியில் படித்தேன், என் மகன் தனியார் பள்ளியில் படிக்கிறார், நாளை அவனுடைய குழந்தைகள் வெளிநாடுகளில் கூட படிக்கக்கூடும். இது தான் சமூக பொருளாதார வளர்ச்சி. அரசியல்வாதிகள் அரசு மருத்துவமனைக்கு செல்லமாட்டார்களா? அரசு அதிகரிகள் அரசு பள்ளிகளில் சேர்க்க மாட்டார்களா? என்று மொக்கையான வாதத்தை இன்னும் எத்தனை நாட்கள் வைப்பீர்கள். விளிம்பு நிலை மனிதர்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் செயல்படும் பொது நிறுவனங்களில் நாமும் போய் உட்கார்ந்து கொண்டால் அது யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒருநாள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கோ அல்லது அருகில் இல்ல அரசு பள்ளிகளுக்கோ சென்று பாருங்கள் எத்தனை மக்கள் இன்னும் அதனை தங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் இடமாக பார்க்கிறார்கள் என்பது புரியும்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள், இன்னும் அரை நூற்றாண்டு காலத்திற்க்குள், இன்று எப்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ சீட்டிற்கு முண்டியடிக்கிறார்களோ அதே போன்று அரசுப்பள்ளிகளில் சேர்க்க முண்டியடிப்பார்கள். அப்போது இந்த CBSE பள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்.

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்

நன்றி,
ராஜன் விஜயன்

அறிஞர் அண்ணாவின் இருமொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கை பற்றி பேசுவதற்கு முன்பு இந்திய புவியியல் கூறுகளை பற்றி தெரிந்துகொள்வோம். இந்தியா ஒற்றை சமூகமோ ஒரு நாடோ அல்ல, இது ஒரு கூட்டுசமுகம் பல நாடுகளின் ஒன்றியம். உதாரணமாக குஜாரத் ஒரு மாநிலம் என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி மொழி தனி பண்பாடு உள்ளது, அதே போன்று தான் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, மஹாராஷ்டிரா என அனைத்து மாநிலங்களும் மொழிவழியாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த கூட்டு சமூகமாக இயங்குகிறது.

இந்திய ஒன்றிய அரசின் கணக்கின்படி தோராயமாக 1652 மொழிகளை பேசும் மக்கள் உள்ளனர், அவற்றில் 387 மொழிகள் உயிர்ப்புடன் குறிப்பிடத்தகுந்த அளவு மக்களால் பேசப்படுகின்றன. மேலும் இந்திய ஒன்றிய அரசு அம்மொழிகளின் 22 மொழிகளை அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளாக பட்டியலிட்டுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட 22 மொழிகளை மட்டுமே அங்கீகரித்திருப்பதில் கூட ஒரு மறைமுக அரசியல் உள்ளது. காரணம் சில ஆயிரம் மக்கள் பேசும் சமஸ்கிருத மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் சில லட்சம் மக்கள் பேசும் துளு மொழிக்கு கிடைக்கவில்லை. இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம் யார், எந்த கூட்டம் நம் மொழிகளையும் நம் பண்பாட்டையும் தீர்மானிக்க துடித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை.

மும்மொழிக்கொள்கை வருவதால் என்ன பிழை? உதாரணமாக மலையாளம் பேசும் உங்கள் உற்றத்தார் அவர்களில் தாய்மொழியை கற்றுக்கொள்ள நாம் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது தானே ஜனநாயகம் என்பது உங்கள் கேள்வியாக இருந்தால் உங்களுக்கு அரசியல் தெரியவில்லை அல்லது தெரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் என்று பொருள்.

சரி எப்படி, உனக்கு மட்டும் இந்த மொழி அரசியல் தெரியுமா? என்றால் தெரியும் கண்டிப்பாக தெரியும். என்ன பார்ப்போம்.

இந்ததியாவில் கல்வி என்பது பொதுப்பட்டியல், அதாவது ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இனைந்து நிர்வகிக்க கூடிய துறை. இங்கு ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளிலும் உண்டு மாநில அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளும் உண்டு. இங்கு மாநில அரசுகளுக்கு என்று மொழிக்கொள்கைகள் உண்டு ஆனால் ஒன்றிய அரசிற்கு தனியாக மொழிக்கொள்கை இருக்க முடியாது ஆனால் சூழல் அப்படியா இருக்கிறது, மயிரில் தொடங்கி தயிர் வரைக்கும் வலிந்து இந்தியை திணிக்க துடிக்கிறது ஒன்றிய அரசு. அப்படி இருக்க உங்களில் கேள்வி யாரை நோக்கியதாக இருக்கவேண்டும் ஒன்றிய அரசையா? அல்லது மாநில அரசையா? இருக்கட்டும் உங்கள் கேள்வி உள்நோக்கம் இல்லாத பொதுவான கேள்வி என்றே வைத்துக்கொள்வோம் அரசியல் தவிர்த்து எதார்த்த களத்திற்கான பதிலும் உண்டு.

உதாரணமாக நீங்கள் கூறுவது போல தமிழக பள்ளிகளில் (லட்சங்கள் தொடங்கி ஆயிரங்கள் வரை நன்கொடை வாங்கும் தனியார் பள்ளிகள் உட்பட) நீங்கள் முன்மொழியும் மும்மொழிக்கொள்கை சாத்தியமா? 1% கூட சாத்தியம் அல்ல கரணம், தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களில் விகிதாச்சாரம் 70:1 அதாவது 70 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர். இதுவே இந்திய ஒன்றியத்க்தின் சராசரி 100:1

ஒரு நகர்ப்புற அரசு தொடக்கப்பள்ளியை எடுத்துக்கொள்வோம், தோராயமாக 200 மாணவர்கள் படிக்கக்கூடும், அதிகபட்சமாக 6 அல்லது 8 ஆசிரியர்கள் என்று வைத்துக்கொண்டாலும், சத்துணவு ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர்கள் போக புத்தக பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் 6 பேர். நீங்கள் கூறுவது போல மலையாளம், கன்னடம், தெலுகு போன்ற அரசால் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளுக்கு மட்டும் ஆசிரியர்கள் வைத்துக்கொண்டால் கூட புதிதாக 21 ஆசிரியர்கள் சேர்க்க வேண்டும். கிட்டத்தட்ட 250% ஆசிரியர்களை கூடுதலாக பணியமர்த்த வேண்டும். அது சாத்தியமா?

பிறகு ஏன் ஒன்றிய அரசு மும்மொழிக்கொள்கையை வலிந்து திணிக்கிறது, அவர்களால் 21 ஆசிரியர்களை அல்ல 2 ஆசிரியர்களை கூட நியமிக்க இயலாது. அவர்கள் மனதில் உள்ள இருவிரலை காட்டி ஒன்றை தொடு என்பது அல்ல ஒரு விரலை காட்டி ஒன்றை தொடு என்பதே. பெரும்பான்மையான மாணவர்கள் இந்தியை தேர்ந்தெடுத்தால் மற்ற மாணவர்களும் வம்படியாக இந்தியை கற்க வேண்டிய சூழல் உருவாகும். இதுதான் அவர்களின் மறைமுக இலக்கு.

சரி இதற்க்கு தீர்வு என்ன? அறிஞர் அண்ணா நாடாளுமன்றத்தில் சொன்னது தான், வீட்டில் இரண்டு நாய்கள் வளர்க்கிறோம் ஒன்று பெரியது ஒன்று சிறியது என்றால் நாய்க்கூண்டில் இரண்டு வாயில்கள் வைக்கவேண்டிய அவசியம் இல்லை பெரிய நாய்க்கான வழியிலேயே சிறிய நாயும் சென்று வரும். நாம் வளர்க்கும் பெரிய நாய் தான் ஆங்கிலம், அதைக்கொண்டு உலக மக்களுடன் உரையாடும் போது உள்ளூர் மக்களுக்கும் அதுவே போதும் என்பது தான்.

இது சர்வாதிகாரம் இல்லையா? என் மலையாளம் பேசும் உற்றாருக்கு என்ன பதில் என்றால்? மாநில அரசு மொழி சிறுமான்மையினர் கணிசமாக வாழும் பகுதிகளில் ஓரியண்டல் பள்ளிகளை திறந்துள்ளது உதாரணமாக உருது மொழி பேசும் மக்கள் உள்ள பகுதிகளில் அரசு ஓரியண்டல் பள்ளிகள் இன்னமும் இயங்குகின்றன. இது அனைத்து மொழிகளுக்கும் பொருந்தும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், தெலுங்கு ஓரியண்டல் பள்ளிகள் என பல தரப்பட்ட மொழிபேசும் மக்கள் பயிலும் பள்ளிகள் நீண்ண்டகாலமாகவே இங்கு இயங்கிக்கொண்டு தான் இருக்கின்றன. தாய்மொழி கற்க விரும்புபவர்கள் அங்கு தங்களில் குழந்தைகளை சேர்க்கலாம்.

மொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பது தவறில்லை ஆனால் எதார்த்தம் புரியாமல் கேள்விகளை எழுப்பும் உங்களின் உள்நோக்கம் பற்றி சந்தேகம் எழுப்புவது அறிஞர் அண்ணாவின் மாணவனாக என்னுடைய தலையாய கடமை என்பதை உணர்வேன்.

எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

மதங்களும் மலங்களும்

மதத்தை போலவே மலங்களிலும் பல வகை உண்டு, சிலர் சில விலங்குகளின் மலத்தை புனிதமாக கருதுவர். சிலர் இயற்க்கை வாழ்வு வாழ்பவர்களின் மலம் துறுநாற்றம் விசுவதில்லை என்பர். என்னை பொறுத்தவரை மலமும் சரி, மதமும் சரி இரண்டுமே கழிவுகள் தான். இரண்டையும் அழித்தாலொழிய அது உரமாக பயன்படாது. அதுவரை அதன் துறுநாற்றம் அனைவரையும் துன்பப்படுத்தும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் மனிதக்கழிவை வீசி சென்ற மலம் ஒருவகை,

அதைவிட அருவருப்பான மலம் அதே கிராமத்தில் இரட்டை குவளை முறையில் டீ கடை நடத்திவரும், பேண்ட சாதியினர் மண்டையில் இருக்கும் மலம்.

அதை விட கொடூரமான மலம், தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலில் நுழையவிடாமல் மன வக்கிரத்துடன் சாமியாக நாடகமாடி மனவக்கிரத்தை வார்த்தைகளில் கொட்டி, பின்னர் அதனால் கம்பி எண்ணிக்கொண்டு இருக்கும் அந்த பெண்ணின் மண்டையில் உள்ள மலம்.

இதைவிடவும் கேடுகெட்ட மலம் ஒன்று உள்ளது, இந்த சம்பவம் குறித்து பாஜக மற்றும் பாமக கருத்து தெரிவிக்கவில்லை என்றால் புரிந்துகொள்ள முடிகிறது அவை மலக்குழிகள் அதில் ஊறித்திளைக்கும் கட்சிகள் என்று,

ஆனால் இது தான் சமூக நீதியா? இது தான் திராவிட மடாலா? என்று நாளுக்கு நாள் வீதியில் நின்றுகொண்டு தெருவில் அடிபட்ட நாய் போல குறைக்கும் நாம் தம்பிகள் கட்சி சீமான் மண்டையில், மற்றும் நாங்கள் தான் உண்மையான திராவிட கட்சி, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கான கட்சி என்று குட்டிக்கரணம் அடித்துக்கொண்டு இருக்கும் அதிமுக கட்சியின் எடப்பாடி மண்டையில் மற்றும் பண்ணீர் மண்டையில் இருப்பதெல்லாம் கேடுகெட்ட கேவலமான மலம்.

நடவடிக்கை எடுத்த மாவட்ட கலெக்டர் அவர்களுக்கும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கும் தமிழக காவல்துறைக்கும், இதெற்க்கெல்லாம் மூலகாரணமாக இருந்த திராவிட மாடல் திமுக அரசிற்கும், தொண்டனாக, சக மனிதர்களை மதிக்கும் மனிதனாக நன்றிகள்.

மதம் மனிதனை மிருகமாக்கும், மனித மூளையை மலமாக்கும்

அண்ணாமலை ஜீ

ஐபிஎஸ் படித்துவிட்டு ஆடு மேய்ப்பது ஒன்றும் பெருமைக்குரிய விஷயமோ, பாராட்டப்பட வேண்டிய சம்பவமோ இல்லை, சரியான திட்டமிடல் இல்லை என்பதன் விளைவு.

நீங்கள் ஆடுமெய்க்கும் எண்ணத்தை முன்னமே திட்டமிட்டு செய்து இருந்தால் இந்நேரம் வேறொரு ஐபிஎஸ் அதிகாரி நமக்கு கிடைத்து இருப்பார். காலம், பயிற்சி, இட ஒதுக்கீடு அனைத்தும் வீண்.

மாரிதாஸ் ஆனாலும், மதன் ஆனாலும், சீமான் ஆனாலும் ஏன் கமலகாசன் ஆனாலும் தமிழகத்தில் மக்கள் மத்தியில் நல்ல பெயரை வாங்க முதலில் பெரியாரயே பயன்படுத்துவர். மாரி அண்ணன் மட்டும் விதி விலக்கு என்றாலும் அவரும் ஆரம்ப காலத்தில் கம்யூனிச கொள்கையை வைத்தே கடையை ஆரம்பித்தார்.

“மோடியை ஏன் ஆதரிக்கிறேன்”, “ரஜினியின் முதல்வர் வேட்பாளர்” என்று களத்திற்கு வரும் நீங்கள் ஒரு இரண்டு நாளைக்கு சமூக வலைதள கண்டெண்டாக இருக்க முடியுமேதவிர அப்படி ஒன்றும் பெரிய அதிர்வை ஏற்படுத்தி விட முடியாது.

இங்கு ஏற்கனவே விவசாயி மற்றும் விளக்கை காண்பித்து விபூதி அடி வாங்கிய கூட்டமே அதிகம். உங்களை போன்று ஆயிரம் சங்கிகளை பார்த்த மண் இது, மலர் இங்கு ஒருநாளும் மலராது. வழக்கம் போல் மாறுவேடத்தில் வராமல் நேரடியாக சங்கி என்று வெளியே வரும் உங்கள் நேர்மை கண்டிப்பாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

வாழ்த்துகள்.

அஃறிணை மனிதர்கள்

சங்கி நண்பர் ஒருவர் இந்த படத்தை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து சுய இன்பம் அடைந்து கொண்டார். இதில் வியப்படைய ஒன்றும் இல்லை, இயல்பாக இருக்கும் சங்கிதணம்.

இந்த படத்தில் “அதுதான் ஸ்டாலின்” என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது, அதாவது திமுகவினர் தலைவர் ஸ்டாலின் அவர்களை அது என்று அஃறிணையில் அழைப்பதாக அவர் எள்ளலுடன் பதிவிட்டு இருந்தார். ஒரு நிமிடம் அந்த படத்தை பார்த்து அதில் உள்ள வரிகளை முழுமையாக படிக்கவும். முழுக்க முழுக்க பேச்சு வழக்கில் எழுதப்பட்டு உள்ளது.

இதில் அது தான் ஸ்டாலின் என்று கூறுவது அப்படி செய்பவர் தான் ஸ்டாலின் என்று பொருள்படும். தவிர யாரும் தலைவரை தரம் தாழ்த்தும் நோக்கத்தோடு பதிந்திருக்க வாய்ப்பு இல்லை. எப்படியோ திமுக என்னும் கட்சியை விமர்சனம் செய்ய வேண்டும், உங்களின் அரசியல் அறிப்பிர்க்கு திமுக தான் தொக்காட்டான் காய்.

மாவட்ட வாரியாக கொரோனா சோதனை செந்தவர்களின் எண்ணிக்கை விவரம் வெளியிட எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் அதனை மதிக்காமல், தமிழகம் கொரோனாவை சிறப்பாக கையாள்கிறது என்று எடப்பாடி அடிமை அரசு கூற, அதற்கு ஒரு விமர்சனம் வைக்க துப்பு இல்லை, நடந்தே சொந்த ஊர் செல்லும் வடநாட்டு மக்களுக்கு ஆதரவாக ஒரு பதிவு இல்லை, அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசை கண்டித்து ஒரு விமர்சனம் இல்லை, எதோ குடும்ப கட்டுப்பாடு செய்த பன்றி போல் அவசர அவசரமாக தைய தக்க என்று குதிக்கு கொண்டு திமுக மீது விமர்சனம்.

அதே சங்கி நண்பர், சென்ற வாரம் அதிமுக அடிமைகளால் ஒரு குழந்தை அநியாயமாக எரித்து கொல்லப்பட்டார், அதற்கு கண்டனம் தெரிவித்து பதிந்த அவர் மறந்தும் அதிமுக பெயரை குறிப்பிடவில்லை. அப்போதே அதை பற்றி பேசி இருந்தால் இதை வைத்தும் அரசியல் செய்வீர்களா என்பார்கள். என்ன தான் உங்கள் நோக்கம்? கேட்டால் நான் சங்கி இல்லை என்பார் பிறகு யார் சார் நீங்க யாருக்கு உங்கள் ஆதரவு என்றால், பல்லை காட்டும் ஸ்மைலி போட்டுவிட்டு ஓடிவிடுவார். தன்னை நடுநிலை நக்கியாகவே முன் நிறுத்திக்கொள்ள நினைப்பர். இது அந்த தனி நபருக்கு மட்டும் அல்ல அவரை போன்ற பல பல எலைட் சங்கிகளுக்கும் பொருந்தும்23

குரோம்பேட்டை டூ அண்ணாநகர் அரசியல்.

என்ன இது சென்னை தானா? வீதிக்கு வீதி டாஸ்மாக் இல்லயே, என்று தேடிக்கொண்டே சென்றால் அதோ அந்த மூளையில் ஒன்றே ஒன்று இருக்கிறது, அதுவும் அருகிலேயே காவல் நிலையமாம், எப்படி சரக்கடித்து முடித்துவிட்டு பிரைடு ரைஸ் கடை காரனிடம் சண்டை இழுப்பது என்று புலம்பிகொண்டே நகர்ந்தார் அந்த தமிழக பொருளாதாரத்தில் மீது அக்கறை கொண்ட குடிமகன்.

ஆம் நான் பேசிக்கொண்டு இருப்பது அண்ணா நகரை பற்றி தான். சரி அப்படியே கொஞ்சம் குரோம்பேட்டை பக்கம் வருவோம்.

மூன்று கிலோமீட்டர் சுற்றளவு, 6 டாஸ்மாக் ஒரே ஒரு பொது கழிப்பிடம் அதுவும் வாரம் ஒருமுறை கண்டிப்பாக சுத்தம் செய்வார்கள். ரயில் நிலையமும் பேருந்து நிலையமும் ஒன்றாக அமைய பெற்ற எழை மக்களின் சொர்கம். உங்களிடம் 5 ரூபாய் இருந்தால் சேத்துப்பட்டு வரை செல்லலாம், 10 ரூபாய் இருந்தால் செங்கல்பட்டு வரை செல்லலாம். இயற்கையாகவே போக்குவரத்து மிக சிறப்பாக அமைய பெற்ற ஒரு குட்டி சிங்கப்பூர் ( இது எல்லாம் ஓவர் என்பவர்கள் வெள்ளிக்கிழமை பல்லாவரம் சந்தைக்கும் சனிக்கிழமை சரவணா ஸ்டோருக்கும் வரவும் ).

சரி அப்போது அண்ணா நகர் குட்டி சிங்கப்பூர் இல்லையா? என்றால் இல்லை, ஒருக்காலும் இல்லை வேண்டும் என்றான் பெரிய மைலாப்பூர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மிக நேர்த்தியான தெருக்கள், குப்பைகள் இல்லா குப்பை தொட்டிகள், தடை இல்லா மின்சாரம், ஆள் நடமாட்டமே இல்லா தெருக்கள், டவுசர் போட்டுக்கொண்டு கீரை வாங்க வரும் அங்கில்கள், சேலை கட்டி ரீபொக் சூ போட்டு வாக்கிங் போகும் ஆண்ட்டி கள்.

சரி இதை வைத்து என்ன அரசியல் பேச போகிறாய் என்று கேட்க போகிறீர்களா?

ஆம் இங்கு அறிய வகை எழைகள் அதிகம் வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் தெருக்களின் பெயர்களை கேளுங்கள், எண்ணிலும் , எழுத்திலும் இருக்கும், தெருக்களுக்கு பெயர் வைக்க கூட அவர்களிடம் தலைவர்கள் இல்லை, அவர்களில் தலைவர்கள் என்று யாரும் இல்லை ஒரு சிலரை தவிர. மேலும் அவர்களுக்கு திராவிட தலைவர்களின் பெயரை தெருக்களுக்கு வைக்க மனமும் வரவில்லை, வராது. ஆம் உருத்த தானே செய்யும். அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் ராஜாஜி, உவேச, சுப்ரமணியன் (பாரதி).

அப்படியே குரோம்பேட்டை பக்கம் வாருங்கள் இங்கு ராஜாஜி பெயரிலும் தெரு உண்டு, பக்தவச்சலம் பெயரிலும் தெரு உண்டு. சாஸ்திரிக்கும் தெரு உண்டு, காந்திக்கும் தெரு உண்டு, பெரியாருக்கும் ஒரு தெரு, நேருவுக்கும் ஒரு தெரு. 90% தெருக்களின் பெயர் தலைவர்களின் பெயரை தான் தாங்கி நிற்கும். இவ்வாறு தலைவர்களின் பெயரை வைப்பது வெறும் விளம்பரம் அல்ல, அது நன்றி கடன். உழைக்கும் மக்கள் அதிகம் வாழும் பகுதி அல்லவா, உழைக்கும் மக்கள் ஒருநாளும் நன்றி மறக்கமாட்டார்கள்.

அரியவகை ஏழைகள் அதிகம் வசிக்கும் நடுவங்கரை பகுதிக்கு அண்ணாவின் பெயரை வைத்து நொடிக்கு ஒருமுறை நினைவுபடுத்தியது தான் திராவிட கழகங்களின் ஆக சிறந்த சாதனை. பார்ப்போம் இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த தெருக்கள் எண்ணயும், எழுத்தயும் சுமந்து நிற்கும் என்று.

தெருக்களின் பெயர் வெறும் பெயர் அல்ல, அது ஒரு வரலாறு, ஒரு நன்றிக்கடன்.

கோனைஸ் 20 ரூபாய்…!!

ஆம் உடலுறவு பற்றி, காம அறிவு பற்றி தந்தையோ, தாயோ நேரடியாக பேச முடியாது. அதற்கு தான் அவர்கள் கோவிலுக்கு செல்லும் போது அந்த சிற்பங்களை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என நம் முன்னோர்கள் அவ்வாறு அமைத்தனர் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே,

இந்த சிற்பம் என்ன சொல்கிறது, ஆணும் பெண்ணும் களவில் ஈடுபடுகிறார்கள், மற்ற இரண்டு பெண்களுக்கும் அங்கு என்ன வேலை?

தயவு செய்து விளக்குங்கள். ஒருவேளை அது அரசன் அவனுக்கு துணையாக அந்தபுற அழகிகள் இருக்கிறார்கள் என்று உன் பதில் வரும் அப்படி என்றால், உன்னை விட்டுவிடு உன் சகோதரியின் கணவன் அல்லது உன் அப்பா இவ்வாறு செய்தால் நீ பொறுத்து கொள்வாயா?

சரி எதாவது விளக்கம் சொல்லி தப்பிக்க முயற்சி செய்வீர்கள். கர்ப்பணயாக துணை நிற்கும் பெண்கள் ஒருவேளை உன் மனைவியாக இருந்தால், உன் அம்மாவாக, உன் தங்கை அக்காவாக இருந்தால் இவ்வாறு தான் கடந்து செல்வாயா?

90 ml என்று ஒரு படம் வந்தது பார்த்து இருக்கிறீர்களா? உண்மையில் அது சமூகம் சார்ந்த படம் ஆனால் அதை அவ்வாறு சொன்னால் பார்க்க மாட்டார்கள் விளம்பரம் தேவை, அதற்கு அவர்கள் கையில் எடுத்துக் கொண்டது காமம், பெண்கள் கவர்ச்சியாக பேசிக்கொள்ள வேண்டும் அவ்வாறு பேசினால் படத்தில் சிறப்பு காட்சிகள் அதிகம் இருக்கும் என்று அனைவரும்( ஆம் இங்கு அனைவரும் என்பது அனைவரையும் படிக்கும் உங்களையும் ) என்ற தோற்றத்தை ஏற்படுத்த வேண்டும் அது அவகளின் நோக்கம் செய்தார்கள். நீங்களும் நாக்கை தொங்க போட்டு கொண்டு தான் பார்த்து இருப்பீர்கள்( நானும் பார்த்தேன்).

ஆனால் பார்ப்பனர்கள் உங்களை திசை திருப்பவே இவ்வாறு செய்தான், நம்ப புடிகிறதா? உங்களால் கருவறைக்குள் செல்ல முடியுமா? நீ என்ன தான் பேண்ட பரம்பரை ஆயினும் நீ அவனுக்கு சூத்திரன். உன்னை கோவிலுக்கு வெளியே சுற்ற வைக்க அவன் செய்த சூழ்ச்சி தான் இந்த வக்கிரமம். இன்று வரை சுற்றிக்கொண்டு தான் இருக்கிறாய்.

காம உணர்ச்சி அனைவருக்கும் இயல்பானது, அதனை புனிதம் என்று நீங்கள் சொல்லும் கோவிலில் வைத்து அதற்கு ஒரு வியாகியானம் பேசுவது தான் நகைச்சுவை.

அகற்றி எறியுங்கள் அந்த அக்கிரமங்களை இளைய தலைமுறைக்கு உங்களை விட அனைத்தும் தெரியும். அப்பறம் இதற்கும் தலைபிற்கும் சம்பந்தம் இல்லை.

திருக்குறளும், ஆங்கிலமும் சங்கிகளின் சங்கிஸ்க்கான் யுத்தியும்.

இறுதி சுற்று படத்தில் ஒரு காட்சி வரும், சங்கிஸ்க்கானை பற்றி. அவன் எதிரிகளை விட எதிரிகளின் ஆயுதத்தின் மீதே குறி வைப்பான். ஆயுதங்கள் அனைத்தயும் அழித்தப்பின் எதிரிகளை மிக எளிதாக வென்று விடுவான். இந்த யுத்தியை தான் சங்கிகள் இப்போது கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில நாட்களாக வள்ளுவர் காவி உடையில் ஜொலிக்கிறார். பூனூல் பட்டை நாமம் ருத்ரச்சம் வேறு. இதற்கு அவரை சானியில் அடித்தது பரவாயில்லை போல் தோன்றுகிறது.

சரி ஒருவன் மத சார்பு உடையவனாக ஏன் இருக்க கூடாது அதுவும் திருவள்ளுவர் ஏன் மத சார்பு உடையவராக இருக்க கூடாது? இருக்கலாம் கண்டிப்பாக இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அவரின் மீது நேற்று வந்த ஒரு மதத்தை திணிப்பது முட்டால் தனம்.

இந்து சனாதன கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவன் வள்ளுவன், “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றான், “உழவே தலை” என்றான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற போது “தெய்வத்தால் ஆகாதேனினும்” என்று தெய்வத்தை சோதனை செய்தான். ஆம் வள்ளுவன் தன்னை எங்கும் கடவுள் மறுப்பாளன் என்று காட்டிகொள்ளவே இல்லை அதே போல் கடவுள் பற்றாலன் என்றும் சொல்லவில்லை.

நான் வியந்துபோன குறள்,

கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.

நன்றாக கவனியுங்கள் இங்கு எடுப்பது என்னும் சொல் கொடுக்கும் பொருளில் வருகிறது நேர் எதிரான பொருள் உடைய சொல்லை வள்ளுவர் நேரடி பொருளாக பயன்படுத்தி இருக்கிறார்.

சரி அது என்ன சங்கிஸ்கான் உத்தி. ஆம் இங்கு காவி சாயம் பூச வேண்டும் என்பது அவர்களின் பலநாள் கனவு. அதற்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

புதிய கல்வி கொள்கையை வைத்து சமஸ்கிருத மொழியை திணிக்க அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது நாட்டிற்க்கு ஒரு பொது மொழி என்பது, அதற்காக நாம் கையில் இருக்கும் ஆங்கிலத்தை பறிக்க பார்த்தார்கள், மீண்டும் முயற்சி செய்வார்கள் கண்டிப்பாக. ஆம் ஆங்கிலமும் தான் நம் ஆயுதம் அவர்கள் எதிரிகளை விட அவர்களின் ஆயுதத்தை அழிப்பது தான் முதல் இலக்கு. இப்போது திருக்குறள் மீது அவர்கள் கவனம் சென்றுள்ளது.

வள்ளுவனுக்கு காவி, என்ன சொல்லி புரிய வைப்பது இந்த மர மண்டைகளுக்க்கு, அவர் எதிர்த்ததே உங்கள் வருறாசிரமத்தை தான். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் வள்ளுவன்.

என்னதான் கலர் கலராக வண்ணம் பூசினாலும் இங்கு தாமரை மயிரை தான் மலரும் என்பது எழுதப்படாத விதி.