மாயப்பேரழகி – குறுந்தொடர் கதை – I

டிஸ்கவரி தமிழ்: பியர்கிரில்ஸ் வாய்ஸில் படிக்கவும்

அன்று ஒருநாள், அந்த கிளிவ் தேசமே அதிர்ச்சியில் உறைந்து இருந்தது. அப்போது தான் பட்டத்தரசிக்கு அந்த தகவல் சொல்லப்பட்டது. நம் மன்னர் ஒரு சிறு புரட்சிப்படையால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் என்று. நொருங்கிப் போனால் அந்த மாயப் பேரழகி.

கிபி எட்டாம் நூற்றாண்டு, தற்போதய ரஷ்யா. அன்று அந்த பேரரசின் பெயர் கிளிவ் தேசம். மன்னன் இல்லாத நாடும், நாட்டு மக்களும் செய்வதறியாது திகைத்துப்போய் இருந்தனர். மன்னனின் மகன் சிறுவன், வேறு வழியின்றி தமாக அரியணையில் ஏறினால் இருபது வயதான ஓல்கா, மன்னனின் கடைசி இளம் மனைவி.

ஓல்கா ஒரு பேரழகி, மன்னனை காதலித்து திருமணம் செய்துகொண்டவள். அவர்களுக்கு ஒரு மகன், அவனுக்கு வயது இரண்டு. என்ன செய்யப்போகிறோம் எப்படி நாட்டை காப்பாற்ற போகிறோம் என்று எதும் தெரியாமல் அரியணையில் அமர்ந்தாள், சுற்றும் சூழ்ச்சிகள், ஆபத்துகள் காலங்கள் ஓடின. ஆனால் அன்று யாருக்கும் தெரியாது இந்த கிளிவ் சாம்ராஜ்ய வரலாறு இந்த ஓல்காவின் பெயரில் இருந்துதான் ஆரம்பம் ஆகும் என்று.

அதற்க்கு முன்பு மன்னன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை தெரிந்துகொள்வோம், இது முன்னர் அதாவது சில நூற்றாண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்த மிகக்கொடூரமான கொலைசெய்யும் அல்லது தண்டனை கொடுக்கும் முறை, கைதியாய் அழைத்துவரப்பட்ட மன்னனை ஒரு தளத்தில் படுத்தினார்கள், அவனது இருகைகளையும், இரு கால்களையும் தனித்தனியாக நான்கு குதிரைகளில் கட்டினார்கள். அவை சாதாரண குதிரைகள் அல்ல போரில் அடிபட்ட தாங்கமுடியாத காயத்தை சுமந்து நிற்கும் குதிரைகள். பொதுவாக போர் குதிரைகள் வேகமாக ஓடும், அதுவும் இது அடிபட்ட குதிரை, அடிபட்ட குதிரை எப்படி வேகமாக ஓடும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். போரில் பொதுவாக குதிரைகள் தாக்கப்படுவது இல்லை, ஒருவேளை அது தாக்கப்பட்டால் அது ஓரிடத்தில் போய் நின்றுகொள்ளவும் அதற்க்காக ஒரு முரசு சத்தம் எழுப்பப்படும், அதை கேட்ட உடனே அந்த குதிரைகள் வேகமாக ஓடி தன நாட்டின் இலக்கை அடைந்துவிடும் அதற்காகவே அது பயிற்சிப்படுத்தப்பட்டு இருக்கும்.

கணைத்துக்கொண்டு அந்த குதிரைகள் அந்த முரசு சத்தத்திற்க்காக காத்திருந்தது. கதறிக்கொண்டு இருந்தான் மன்னன். ஒரு முரசு சத்தம், ஒரே சத்தம், நான்கு புறமும் சீறிப்பாய்தது குதிரைகள். கதை முடிந்தது. உடல் நான்கு கூறுகளானது, உயிர் எந்த கூறில் உள்ளது என்று கூட தெரியவில்லை, ஒரு பேரரசை ஆண்ட மாமன்னனின் அலறல், அழுகையாகி, கூச்சலாகி, அமைதியாகிப்போனது. நான்கு உடல் கூறுகளும் மன்னனின் ஆட்களுக்கு கிடைத்துவிட கூடாது என்பதற்காக தனித்தனியாக தூக்கி வீசியெறிப்பட்டன. வரலாறு அன்றைய நாளை கவனமாக குறித்துக்கொண்டது.

மன்னன் ஏன் இவ்வளவு கொடூரமாக கொல்லப்பட்டான், யார் அந்த புரட்சிப்படை? அவர்களின் நோக்கம் என்ன? என்ன ஆனால் ஓல்கா?

தொடரும்…