திருக்குறளும், ஆங்கிலமும் சங்கிகளின் சங்கிஸ்க்கான் யுத்தியும்.

இறுதி சுற்று படத்தில் ஒரு காட்சி வரும், சங்கிஸ்க்கானை பற்றி. அவன் எதிரிகளை விட எதிரிகளின் ஆயுதத்தின் மீதே குறி வைப்பான். ஆயுதங்கள் அனைத்தயும் அழித்தப்பின் எதிரிகளை மிக எளிதாக வென்று விடுவான். இந்த யுத்தியை தான் சங்கிகள் இப்போது கையில் எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

சில நாட்களாக வள்ளுவர் காவி உடையில் ஜொலிக்கிறார். பூனூல் பட்டை நாமம் ருத்ரச்சம் வேறு. இதற்கு அவரை சானியில் அடித்தது பரவாயில்லை போல் தோன்றுகிறது.

சரி ஒருவன் மத சார்பு உடையவனாக ஏன் இருக்க கூடாது அதுவும் திருவள்ளுவர் ஏன் மத சார்பு உடையவராக இருக்க கூடாது? இருக்கலாம் கண்டிப்பாக இருக்கலாம் அது அவரின் தனிப்பட்ட உரிமை. ஆனால் அவரின் மீது நேற்று வந்த ஒரு மதத்தை திணிப்பது முட்டால் தனம்.

இந்து சனாதன கொள்கைக்கு முற்றிலும் மாறுபட்டவன் வள்ளுவன், “பிறபொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றான், “உழவே தலை” என்றான். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்ற போது “தெய்வத்தால் ஆகாதேனினும்” என்று தெய்வத்தை சோதனை செய்தான். ஆம் வள்ளுவன் தன்னை எங்கும் கடவுள் மறுப்பாளன் என்று காட்டிகொள்ளவே இல்லை அதே போல் கடவுள் பற்றாலன் என்றும் சொல்லவில்லை.

நான் வியந்துபோன குறள்,

கெடுப்பதூஉம், கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம், எல்லாம் மழை.

நன்றாக கவனியுங்கள் இங்கு எடுப்பது என்னும் சொல் கொடுக்கும் பொருளில் வருகிறது நேர் எதிரான பொருள் உடைய சொல்லை வள்ளுவர் நேரடி பொருளாக பயன்படுத்தி இருக்கிறார்.

சரி அது என்ன சங்கிஸ்கான் உத்தி. ஆம் இங்கு காவி சாயம் பூச வேண்டும் என்பது அவர்களின் பலநாள் கனவு. அதற்கு அவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.

புதிய கல்வி கொள்கையை வைத்து சமஸ்கிருத மொழியை திணிக்க அவர்கள் கையில் எடுத்துக்கொண்டது நாட்டிற்க்கு ஒரு பொது மொழி என்பது, அதற்காக நாம் கையில் இருக்கும் ஆங்கிலத்தை பறிக்க பார்த்தார்கள், மீண்டும் முயற்சி செய்வார்கள் கண்டிப்பாக. ஆம் ஆங்கிலமும் தான் நம் ஆயுதம் அவர்கள் எதிரிகளை விட அவர்களின் ஆயுதத்தை அழிப்பது தான் முதல் இலக்கு. இப்போது திருக்குறள் மீது அவர்கள் கவனம் சென்றுள்ளது.

வள்ளுவனுக்கு காவி, என்ன சொல்லி புரிய வைப்பது இந்த மர மண்டைகளுக்க்கு, அவர் எதிர்த்ததே உங்கள் வருறாசிரமத்தை தான். பிறபொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவன் வள்ளுவன்.

என்னதான் கலர் கலராக வண்ணம் பூசினாலும் இங்கு தாமரை மயிரை தான் மலரும் என்பது எழுதப்படாத விதி.

பொக்கிஷங்கள்

ஒரு நாள் நானும் என் பையனும் வீட்டில் விளையாடிக்கொண்டு இருந்தோம், அப்போது அவனுக்கு ஏறத்தாழ ஒன்றரை வயது. எழுந்து நடக்க முயலும் பருவம். ஆனால் அப்போதும் கொஞ்சம் துரு துரு என்று தான் இருப்பான்.

ஒளிந்து பிடித்து விளையாடிக்கொண்டு இருந்தோம். தவந்து போய் ஒரு அறைக்குள் ஒளிந்துகொண்டு அப்பா அப்பா என்றான். நானும் அவனை தேடுவது போல் தம்பி எங்க காணும் என்று தேடினேன். அவன் ஒளிந்துகொண்டு இருந்த அறையின் கதவு தானியங்கி கதவு உள்ளே சென்று பூட்டிக்கொண்டான். அவனுக்கு திறக்க தெரியவில்லை. எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வர நானும் பேசிக்கொண்டே சென்றுவிட்டேன். அங்கு அவன் நின்றுகொண்டு அப்பா அப்பா அன்று அழைத்துக்கொண்டு இருந்தான்.

சிறிது நேரத்தில் என் மனைவி என்னிடம் வந்து தம்பி உள்ள மாட்டிக்கொண்ட விசயத்தை சொல்ல ஒரு நிமிடம் படபடப்பு தொற்றிக்கொண்டது. கதவை உள்பக்கமாக தான் திறக்க முடியும், அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். சிரித்துகொண்டு இருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அழ ஆரம்பித்தான். கதவை தள்ளி உடைத்து திறக்க முடியாது அவன் கதவின் அருகிலேயே நிற்கிறான். பரபரப்பு பக்கத்து விட்டில் இருந்து கூட வந்து முயற்சி செய்தார்கள். என்ன செய்வது என்றே புரியவில்லை.

ஒரு யோசனை வந்தது. அறையின் பின் புறம் சென்று ஜன்னல் கதவை உடைத்து அவனை என்பக்கமாக அழைத்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தோம். அவனும் அப்பா என்று ஜன்னலின் பக்கம் வந்தான். பிறகு கதவை உடைத்து திறந்தோம். இதனை இங்கு பகிர்வதற்கு காரணம் விளம்பரம் அல்ல. ஒருவேளை அங்கு அந்த அறையில் ஜன்னல் இல்லாமல் இருந்தால்? அன்று முழுவதும் யாரிடமும் பேசவில்லை தொலைபேசியை அனைத்து விட்டு என் பையனுடன் மட்டுமே இருந்தேன். மீண்டு வர எனக்கு சில நாட்கள் ஆனது.

ஆனால் இன்று… “தம்பி அம்மா இருக்கேன் பயப்டாத தம்பி” என்று அம்மா அழைக்கிறாள் அவனோ “சரிமா” என்கிறான். அந்த குழந்தை நம்பிக்கொண்டு தானே இருந்து இருக்கும். எந்த பெற்றோரும் பிள்ளைகளை காயப்படுத்த வேண்டும் என நினைப்பதில்லை. சில கவன குறைவு தான். இந்த ஒரு மரணம் நமக்கு ஒரு ஆயிரம் பாடத்தை கற்று தந்துவிட்டது. தம்பி சுர்ஜித் மரணம் கடைசி விபத்தாக இருக்க வேண்டும்.

ஒன்றை மனதில் கொள்வோம். வருமுன் காப்பதே சிறந்தது. உங்கள் குழந்தைகள் மீது சபதம் எடுப்போம்.

1. கண்டிப்பாக உனக்காக நேரம் செலவு செய்வேன்.

2. உனக்கு தொலைபேசியை தர மாட்டேன் அதற்கு பதில் உனக்கு புத்தகங்கள், விளையாட்டு பொம்மைகள், கிண்டில் போன்ற அறிவு சார்ந்த பொருட்களை வாங்கி கொடுப்பேன்.

3. உன் மீதும் உன் சுற்றுப்புறத்தில் நிகழும் மாற்றத்தின் மீதும் எப்போதும் என் கவனம் இருக்கும்.

4. நம் விட்டின் முகவரியையும் என் தொலைபேசி எண்ணயும் உனக்கு மனப்பாடம் செய்ய வைப்பேன்.

5. உன் நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பேன்.

6. பருவம், காதல், காமம், இனகவற்சி, மற்றும் உடலின் மாற்ற கூறுகள் தொடர்பாக வெளிப்படையாக பேசுவேன்.

7. உனக்கு என்னிடம் விவாதம் செய்யும் உரிமையை அளிப்பேன்.

8. உன்னை யாரிடமும் ஒப்பிட மாட்டேன்.

9. உன்னிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.

10. தோல்விகளை தாங்கிக்கொள்ள பயிற்சியும், வெற்றிகளை அடக்கத்தொடு அணுகும் அணுகுமுறையும் உனக்கு கற்றுக் கொடுப்பேன்.

இது உணக்காகவும் உனக்காக வாழும் எனக்காகவும் நான் எடுக்கும் சபதம்.

பிழை இருந்தால் மன்னியுங்கள், இதுதான் இப்போதைய தேவை. குழந்தைகள் பொக்கிஷங்கள். பாதுகாப்போம். பாடம் கற்போம்.