Who I am – நான் யார்?

ரோகித், பிரேமா மற்றும் நான்

இந்தியாவின் தென்கோடியில் உள்ள தமிழகம் என் நாடு, அரசுப்பள்ளியில் படித்து இளங்கலை அறிவியல் பட்டம் பெற்று சென்னை நோக்கி ஓடிவந்த கோடான கோடி இளைஞர்களில் நானும் ஒருவன். வழக்கம் போல சென்னை என்னை வாரி அனைத்துக் கொண்டது. வியப்பையும், ஆச்சரியங்களையும் ஆரம்ப காலகட்டங்களில் ஏற்படுத்திய இந்த நகர்ப்புற வாழ்க்கை போக போக பழகிப்போனது.

2011 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியை தொடங்கினேன். இன்று முதுநிலை மென்பொருள் பொறியாளராக வாழ்க்கை பயணித்துக்கொண்டு இருக்கிறது.