முனைவர் தொ.ப அவர்களின் “பண்பாட்டு அசைவுகள்” நூல் விமர்சனம்
விளையாட்டு என்ற சொல்லை கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா? இந்த சொல்லில் பொழுதுபோக்கு என்ற பொருள் எங்காவது தொனிக்கிறதா? பொழுதுபோக்கு, பொருளற்றது, ஆழமில்லாதது என்ற பொருளிலேயே அந்த சொல்லை நாம் இப்போது பயன்படுத்தி வருகிறோம். என்ற பளிச் முன்னுரையுடன் தொடங்குகிறார் ஆசிரியர் தொ.ப.
வேட்டை சமூகமாய் வாழ்ந்த மனிதன் மெல்ல முன்னேறி சமூக உயிரினமாக மாறியதற்கு முக்கிய காரணம் விளையாட்டாக கூட இருக்கலாம். விளையாட்டு நம் சமூக விழுமியங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக பணக்கார விளையாட்டு என்று அறியப்படும் கோல்ப் விளையாட்டை எடுத்துக்கொள்வோம் இந்த விளையாட்டை ஒருவர் ஆட மிகப்பெரிய மைதானம் தேவைப்படுகிறது அதனால் தான் அதனை சாமானியர்களால் ஆட முடியவில்லை. ஆனால் நாம் தெருக்களில் விளையாடும் கோலி குண்டிற்கும் இதற்கும் பெரிய வித்யாசம் ஒன்றும் இல்லை. இரண்டின் நோக்கமும் காய்களை குழிகளில் தள்ளுவதுதான், ஆனால் இந்த சமூகம் என்ன சொல்லி தருகிறது குண்டு விளையாடுவது உதாறித்தனமானது என்று.
இந்த கட்டுரை பல்லாங்குழி விளையாட்டை பற்றி மிக விரிவாக பேசுகிறது. சொல்லப்போனால் இந்த விளையாட்டு சமத்துவம் பேசுகிறது ஆம் அனைவருக்கும் காய்களை சமமாக பிரித்து கொடுத்து விளையாட்டு தொடங்கிகிறது. சூது சில தருணங்களில் நம்மை நிராயுதபாணி ஆக்கும் என்ற உண்மையை பேசுகிறது. தோற்பவன் கையில் ஒன்றுமே இல்லாத போது இந்த விளையாட்டு நிறைவு பெறுகிறது.
ஆரம்பத்தில், விளையாடும் இருவருக்கும் பக்க குழிகள் நீங்கலாக ஆளுக்கு தலா ஏழு குழிகளும், குழிக்கு தலா ஐந்து காய்களும் கொடுக்கப்படும்.
தொடரும்…